பக்கம் எண் :

230யுத்த காண்டம் 

பொன்     சென்று அறியா - (அத்தேர் நிறத்தினால்) பொன்னும்
உவமை  என்று கூறமுடியாத; உவணத் தனிப்புள்ளினுக்கும் - கருடன்
என்னும்  ஒப்பற்ற  பறவைக்கும்;  மின்சென்று  அறியா  மழுவாளன்
விடைக்கும்
- மின்னலும் ஒப்பாகச் சென்று அறியாத மழுப்படையைக்
(கையில்)   ஏந்திய   சிவபிரானது   இடபத்துக்கும்;   மேல்நாள்   -
முற்காலத்தில்;  பின் சென்றது அல்லது - (அவைகள் தோற்றுப் போய்
முன்னால்  ஓடியபோது  அவற்றைத்  துரத்திக்  கொண்டு  பின்னால்
சென்றதே  அல்லாமல்; ஒரு பெருஞ்சிறப்பு உற்ற போதும் - ஒப்பற்ற
(தன்  வலிமை  துணை  வலிமை) முதலிய பெருஞ் சிறப்பைப் பெற்ற
காலத்தில்  கூட;  மூன்று உலகத்தினுள்ளும் - மூன்று உலகங்களிலும்;
முன்   சென்று   அறியாதது  -  தோல்வி  அடைதலால்  அவைகள்
பின்னால் துரத்தி வரத்தான்தோற்று முன்சென்று அறியாதது.
 

பொன்    - பொன்வண்ணம், சென்று அறியா - நீங்காத, உவணன் -
அழகிய   சிறகுகளை   உடையவன்  என்று  பொருள்படும்.  இவன்
காசியபமுனிவரது   மனைவியருள்   விநதை   என்பவளது   மகன்.
சூரியனின்    தேர்ப்பாகனான   அருணனின்   தம்பி.   திருமாலின்
வாகனமாய்  இருப்பவன். இதனால் இவனுக்குப் பெரிய திருவடி என்று
வைஷ்ணவ சம்பிரதாயத்தில் பெயர் உண்டு.
 

                                                  (20)
 

8022.

‘ஏயாத் தனிப் போர் வலி காட்டிய இந்திரன்தன்
சாயாப் பெருஞ் சாய் கெட, தாம்புகளால் தடந் தோள்
போய் ஆர்த்தவன் வந்தனன், வந்தனன்’ என்று பூசல்
பேய் ஆர்த்து எழுந்து ஆடு நெடுங் கொடி பெற்றது அம்மா!

 

ஏயாத்   தனிப்போர் வலி காட்டிய இந்திரன் தன் - (அத்தேர்)
ஒப்பில்லாத சிறந்த போர் வலிமையைக் காட்டிப் (போரிட்ட) இந்திரன்
தன்னுடைய;  சாயாப்  பெருஞ்சாய்  கெட - அழியாத பெரு வலிமை
அழியும்படியாக; தாம்புகளால்   தடந்தோள்   போய்  ஆர்த்தவன்
-கயிறுகளால்  (மாயைப்  பாசத்தால்)  (அந்த இந்திரனுடைய) அகன்ற
தோள்களைப் (போரில்) சென்று கட்டிய (வீரன்); வந்தனன் வந்தனன்
என்று
- வந்தான் வந்தான் என்று; பூசல்  பேய்  ஆர்த்து  எழுந்து
ஆடு
- பேரொலியுடைய பேய்கள்