இரைத்து எழுந்து ஆடுகிற; நெடுங்கொடி பெற்றது அம்மா - பெரிய கொடியைப் பெற்றது. |
இந்திரனை மாயைப் பாசத்தால் கட்டி வென்ற வீரனாகிய இந்திரசித்தனது கொடி பேய்க் கொடி என்பது இப்பாடலால் தெரிகிறது. |
(21) |
| 8023. | செதுகைப் பெருந் தானவர் ஊனொடும் தேய்த்த நேமி- யது;-’கைத் திசை யானையை ஓட்டியது’ என்னலாமே?- மதுகைத் தடந் தோள் வலி காட்டிய வான வேந்தன் முதுகைத் தழும்பு ஆக்கிய மொய் ஒளி மொட்டது அம்மா! |
செதுகைப் பெருந்தானவர் - (மேலும் அந்தத் தேர்) பொருதலைச் செய்த பெரிய அசுரர்களுடைய; ஊனொடும் தேய்த்த நேமியது - உடம்புகளைத் (தேய்த்து) அழித்த சக்கரங்களை உடையது; மதுகைத் தடந்தோள் வலி காட்டிய - வெற்றி பொருந்திய தன் பெருந்தோள் வலிமையைக் காட்டிப் போர் செய்த; வானவேந்தன் முதுகைத் தழும்பு ஆக்கியது - இந்திரனது முதுகில் தழும்பை உண்டாக்கிய; மொய் ஒளி மொட்டது - நிறைந்து ஒளியுடைய மொட்டு என்ற (தேர் உறுப்பை) உடையது; கைத்திசை யானையை ஓட்டியது என்னலாமோ அம்மா - (இத்துணை சிறப்புப் பெற்றிருப்பதால்) துதிக்கைகளை உடைய திசையானைகளை வென்று விரட்டியது என்று கூறுதல்(அதற்குச் சிறப்போ? |
வானவேந்தன் முதுகைத் தழும்பு ஆக்கல் - இராவணனால் வெல்லமுடியாத இந்திரனை இந்திரசித்தன் வென்று இலங்கைக்குக் கொண்டு போன போது, தேரின் மொட்டில் சேர்த்துக் கட்டிக்கொண்டு போனதால் ஏற்பட்ட தழும்பு குறித்தது. மொட்டு - தாமரை வடிவில் அமைந்து தேரின் முன்னால் பொருத்தப்படும் ஒரு தேருறுப்பு. இதனைக் “கொடிஞ்சி” என்ப. |
(22) |
| 8024. | அத் தேரினை ஏறியது ஒப்பன ஆயிரம் தேர் ஒத்து ஏய்வன சேமமதாய் வர, ‘உள்ளம் வெம் போர்ப் பித்து ஏறினன்’ என்ன, நடந்தனன்- பின்பு அலால், மற்று எத் தேவரையும் முகம் கண்டு அறியாத ஈட்டான். |