எத்தேவரையும் - எல்லாத் தேவர்களையும்; (தோற்று ஓடச் செய்ததால்) பின்பு அலால் மற்று - (அவர்களின்) பின்புறத்தை அல்லாமல்; முகங்கண்டு அறியாத - (எதிர்வந்த) முகத்தைக் கண்டு அறியாத; ஈட்டான் - வலிமை உடையவன் ஆகிய இந்திரசித்தன்; அத்தேரினை ஏறி - அந்தத் தேரின் கண் ஏறிக்கொண்டு; அது ஒப்பன ஆயிரம் தேர் - அந்தத் தேரினைப் போன்ற ஆயிரம் தேர்கள்; சேமமதாய் வர - பாதுகாவலாய் வர; உள்ளம் வெம்போர்ப் பித்து ஏறினன் என்ன - மனத்தில் கொடுமையான போர்ப் பித்துக் கொண்டவன் என்று சொல்லும்படியாக; நடந்தனன் - போர்க்களம் நோக்கி நடந்தான். |
(23) |
| 8025. | அன்னானொடு போயின தானை அளந்து கூற என்னால் அரிதேனும், இயம்பு வான்மீகன் என்னும் நல் நான்மறையான் ‘அது நாற்பது வெள்ளம்’ என்னச் சொன்னான்; பிறர் யார், அஃது உணர்ந்து தொகுக்கவல்லார். |
அன்னானொடு - அந்த இந்திரசித்தனோடு; போயின தானை - (உடன்) சென்ற படைகளின் அளவை; என்னால் அளந்து கூற அரிதேனும் - என்னால் இவ்வளவு என்று அறுதியிட்டு அளந்து கூறல் அருமையானதென்றாலும்; இயம்பு வான்மீகன் என்னும் - (பிறரால்) சிறப்பித்துச் சொல்லப்படுகிற வான்மீகி என்கிற; நல்நான் மறையான் - சிறப்புடைய நான்கு வேதங்களையும் கற்றறிந்த முனிவன்; அது நாற்பது வெள்ளம் என்னச் சொன்னான் - அச்சேனையின் அளவு நாற்பது வெள்ளம் என்று கூறினான்; அஃது உணர்ந்து தொகுக்க வல்லார் - அச்சேனையின் (அளவை) அறிந்து தொகுத்து உரைக்க வல்லவர்கள்; பிறர் யார் - அவனன்றிப் பிறர் யாருளர் என்றவாறு. |
இயம்பு வான்மீகன் - முதல் நூலை இயம்பிய வால்மீகி முனிவர் எனினுமாம். |
(24) |
| 8026. | தூமக் கண் அரக்கனும், தொல் அமர் யார்க்கும் தோலா மாபக்கனும், அந் நெடுந் தேர் மணி ஆழி காக்க, |