| தாமக் குடை மீது உயர, பெருஞ் சங்கம் விம்ம, நாமக் கடற் பல இயம் நாற்கடல் மேலும் ஆர்ப்ப. |
தூமக் கண் அரக்கனும் - புகை நிறக்கண்ணனான அரக்கனும்; தொல் அமர் யார்க்கும் தோலா மாபக்கனும் -(முன்பு நடந்த) பழைய போர்களில் எவருக்கும் தோல்வி அடையாத மாபக்கன் என்பவனும்; அந்நெடுந் தேர் ஆழிகாக்க - (இந்திரசித்தன் ஏறிச்சென்ற) அந்தப் பெரிய தேரின் அழகிய சக்கரத்தைக் காத்து நிற்க; தாமக்குடை மீது உயர - வெண்கொற்றக்குடை மேல் பொருந்திய விளங்க; பெருஞ் சங்கம் விமம் - பெரிய சங்குகள் முழங்க; நாமக்கடல் பல்இயம் - அச்சத்தை உண்டாக்குகிற கடல் போல் மிகுந்த பல்வகை வாத்தியங்கள்; நாற்கடல் மேலும் ஆர்ப்ப - நான்கு கடல்களிலும் மிகுதியாகப் பேரொலி எழுப்பவும்; ‘சென்றனன்’ என அடுத்த பாடலொடு தொடர்ந்து முடியும். |
தூமக்கண் அரக்கன் - தூமிராட்சன். மாபக்கன் - மகாபார்சுவன். தூமக்கண் அரக்கண் இராவணன் முதல் நாள் போரில் தோற்பதற்கு முன்பே அனுமனால் கொல்லப்பட்டவன் என்றும், மகாபார்சுவன் அதிகாயனுக்குத் துணையாகப் போய் ருசபன் என்னும் வானரனால் கொல்லப்பட்டவன் என்றும் முதல் நூல் கூறவதாக வை. மு.கோ. குறித்துள்ளார். இவர்களில் தூமிராட்சன் இராவணனுக்கு மாமன் முறையினன் என்றும், மகாபார்சுவன் உடன் பிறந்தவன் முறையின்ன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கம்பர் முதல் நூலில் கூறப்பட்டுள்ளதை மாற்றி அவர்கள் இந்திரசித்தனுக்குத் துணையாகச் சென்றனர் என்று கூறுவதை எண்ணுக. |
(25) |
| 8027. | தேர் ஆயிரம் ஆயிர கோடி தன் மாடு செல்ல, போர் ஆனை புறத்தின் அவற்றின் இரட்டி போத; தார் ஆர் புரவிக் கடல் பின் செல, தானை வீரப் பேர் ஆழி முகம் செல, சென்றனன்-பேர்ச்சி இல்லான். |
பேர்ச்சி இல்லான் - போரில் தளர்ச்சி இல்லாதவனாகிய இந்திரசித்தன்; ஆயிரம் ஆயிரகோடி தேர் தன் மாடு செல்ல - ஆயிரமாயிரம் கோடித் தேர்கள் தன் பக்கத்தில் (பாதுகாவலாய்) நெருங்கி வரவும்; அவற்றின் இரட்டி - (அந்தத் தேர்களின்) இரு மடங்காக; போர் ஆனைபுறத்தின் போத - போராற்றல் உள்ள யானைகள் புறக்காவலாகச் சூழ்ந்து வரவும், தார் ஆர் புரவிக் கடல் பின்செல - மாலையணிந்த குதிரைப் படைக்கடல் பின்னால் |