வரவும்; தானை வீரப்பேர் ஆழிமுகம் செல - தரைப்படை வீரர்களது பெருங்கடல் முன்னே செல்லுமாறு; சென்றனன் - சென்றான். |
(26) |
‘வருபவன் யார்’ என் இலக்குவன் வீடணனை வினவல் |
கலி விருத்தம் |
| 8028. | நின்றனன் இலக்குவன், களத்தை நீங்கலன்- ‘பொன்றினன், இராவணன் புதல்வன்; போர்க்கு இனி, அன்று அவன், அல்லனேல் அமரர் வேந்தனை வென்றவன், வரும்’ என விரும்பும் சிந்தையான். |
இராவணன் புதல்வன் பொன்றினன் - இராவணன் மகனாகிய அதிகாயன்’ இறந்துவிட்டான்; இனி போர்க்கு - இனிமேல் போருக்கு; அன்று அவன் - சினம் மிக்க இராவணன்; அல்லனேல் - அவனல்லன் எனின்; அமரர் வேந்தனை வென்றவன் - தேவர் தலைவனை வென்றவன் ஆகிய இந்திர சித்தன்; வரும் என - (ஆகிய இருவரின் ஒருவர்) வருவர் என்று; விரும்பும் சிந்தையான் - ஆசையுடன் (எதிர்பார்க்கும்) மனதுடன்; இலக்குவன் - இலக்குவன்; களத்தை நீ்ங்கலன் - போர்க்களத்தை விட்டு நீங்காதவனாய்; நின்றனன் - நின்றான். |
(27) |
வீடணன் விடை |
| 8029. | ‘யார், இவன் வருபவன்? இயம்புவாய்!’ என, வீர வெந் தொழிலினான் வினவ, வீடணன், ‘ஆரிய! இவன் இகல் அமரர் வேந்தனைப் போர் கடந்தவன்; இன்று வலிது போர்’ என்றான். |
வீரவெந்தொழிலினான் - வீரக் கொடுந்தொழிலை உடைய (இலக்குவன்); இவன் வருபவன் யார்? - (இதோ இங்கு) வருகின்றவன் யார் என்று; (வீடணனைப் பார்த்து) இயம்புவாய் - சொல்லுவாய் என்று கேட்க; வீடணன் - (அதற்கு விடையாக) வீடணன்; ஆரிய - ஆடவரில் சிறந்தவனே; இவன் - வருகின்ற இவன்; இகல் அமரர் வேந்தனை - போர் ஆற்றல் மிக்க தேவர் |