பக்கம் எண் :

 நாகபாசப் படலம் 235

தலைவனைப்;  போர் கடந்தவன் - போரில் வஞ்சியாது எதிர் நின்று
வென்றவன்; இன்று  போர்  வலிது  என்றான்  -  இன்றைய  போர்
கடுமையானது என்று கூறினான்.
 

ஆரியன் - ஆடவர்  திலகன்,  கடத்தல் - வஞ்சியாது எதிர் நின்று
வெல்லல். ஆரிய - அண்மை விளி.
 

                                                 (28)
 

8030.

‘எண்ணியது உணர்த்துவது உளது, ஒன்று-எம்பிரான்!-
கண் அகன் பெரும் படைத் தலைவர் காத்திட,
நண்ணின துணையொடும் பொருதல் நன்று; இது
திண்ணிதின் உணர்தியால், தெளியும் சிந்தையால்.

 

எம்பிரான்   - எமக்குத் தலைவனே (என்று வீடணன்) இலக்குவனை
விளித்து);  எண்ணியது  ஒன்று  -  (நான்)  எண்ணியதாகிய ஒன்றை;
உணர்த்துவது  உளது  -  உனக்குத்  தெரிவிக்க வேண்டி உளது; கண்
அகன்  பெரும்  படைத்தலைவர் காத்திட
- (அது என்னவென்றால்)
இடமகன்ற  பெரிய  படைக்குத் தலைவர்கள் (உனக்குத் துணையாகக்)
காத்திட;  நண்ணிய  துணையொடும் - பொருந்திய துணைவர்களோடு;
பொருதல் நன்று - (இந்த இந்திரசித்தனுடன்) போரிடுதல் நல்லது; இது
- இக்கருத்தை; தெளியும் சிந்தையால் - ஆய்ந்து அறியும் மனத்தால்;
திண்ணிதின் உணர்தியால் - உறுதியாக எண்ணிப் பார்ப்பாய்.
 

                                                  (29)
 

8031.

‘மாருதி, சாம்பவன், வானரேந்திரன்,
தாரை சேய், நீலன் என்று இனைய தன்மையார்,
வீரர், வந்து உடன் உற,-விமல!-நீ நெடும்
போர் செயத் தகுதியால்-புகழின் பூணினாய்!

 

விமல  -  குற்றம்  அற்றவனே;  புகழின்  பூணினாய்  -  புகழை
அணிகலனாக  அணிந்தவனே;  மாருதி  -  அனுமனும்; சாம்பவன் -
கரடித்    தலைவன்   ஆகிய   சாம்பவானும்;   வானரேந்திரன்   -
குரங்குகளின்  தலைவனாகிய  சுக்ரீவனும்;  தாரை சேய் - தாரையின்
மகனாகிய  அங்கதனும்;  நீலன்  - படைத்தலைவன் ஆகிய நீலனும்;
என்று  இனைய தன்மையார் - என்று கூறப்பட்ட இத்தகைய தன்மை
உள்ளவர்களான; வீரர் உடன் வந்து உற - வீரர்கள்