உன்னுடன் வந்து பொருந்த; நீ - நீ (இந்திரசித்தனுடன்); நெடும் போர் செயத்தகுதியால் - பெரும் போரை விளைவித்தல் தகுதியாகும். |
சாம்பவன் - கரடித்தலைவன். பிரமன் கொட்டாவி விட்ட போது பிரமனின் அம்சமாகத் தோன்றியவன் என்பது புராணச் செய்தி. வானரேந்திரன் - சுக்ரீவன். |
(30) |
| 8032. | ‘பல் பதினாயிரம் தேவர் பக்கமா, எல்லை இல் சேனை கொண்டு எதிர்ந்த இந்திரன் ஒல்லையின் உடைந்தனன், உயிர் கொண்டு உய்ந்துளான்- மல்லல் அம் தோளினாய்!-அமுதின் வன்மையால். |
மல்லல் அம் தோளினாய் - பெருமை மிகுந்த அழகிய தோள்களை உடையவனே; பல்பதினாயிரம் தேவர் - பல பதினாயிரக்கணக்கான தேவர்கள்; பக்கமா - பக்க பலமாக வர;எல்லையில் சேனை கொண்டு - அளவில்லாத படைகளைக் கொண்டு; எதிர்ந்த இந்திரன் - (இந்த இந்திரசித்தனை) எதிர்த்த இந்திரன்; அமுதின் வன்மையால் - அமுதம் உண்டதன் காரணமாக; ஒல்லையில் உடைந்தனன் - விரைவில் தோற்றவனாகியும் கூட; உயிர் கொண்டு உய்ந்துளான் - உயிரை விடாமல் கொண்டு தப்பிப் பிழைத்துள்ளான். |
(31) |
| 8033. | ‘இனி அவை மறையுமோ, இந்திரன் புயப் பனி வரை உள நெடும் பாசப் பல் தழும்பு? அனுமனைப் பிணித்துளன் ஆனபோது, இவன் தனு மறை வித்தகம் தடுக்கற்பாலதோ?’ |
இந்திரன் புயப்பனிவரை உள - இந்திரனுடைய தோள்களாகிய பனிமலையில் (இமயமலையில்) உள்ள; நெடும் பாசப் பல்தழுப்பு - (இவன் பிணித்ததால் ஏற்பட்ட) நீண்ட (மாயைக்) கயிற்றினால் உண்டான பல தழும்புகள்; இனி அவை மறையுமோ - இனிமேல் மறைந்து விடுமோ? அனுமனைப் பிணித்துளன் ஆனபோது - (அது மட்டும் அல்லாமல்) அனுமனையே பிரமனது கணையால் கட்டியவனாக இருக்கும் போது; இவன் - இந்த இந்திரசித்தனுடைய; தனுமறை வித்தகம் - வில்பயிற்சியின் திறமை; தடுக்கற் பாலதோ - (பகைவரால்) தடுத்தற்கு உரியதோ. |