மோதரன் - மகோதரன்; சிறுமை - துன்பம். |
(2) |
“மருத்தனைச் சனகனாக உருமாற்றிக் காட்டுக” என மகோதரன் கூறுதல். |
7634. | ‘உணர்த்துவென், இன்று நன்று; ஓர் உபாயத்தின் உறுதி மாயை புணர்த்துவென், சீதை தானே புணர்வது ஓர் வினையம் போற்றி; கணத்து, வன் சனகன்தன்னைக் கட்டினென் கொணர்ந்து காட்டின்- மணத் தொழில் புரியும் அன்றே-மருத்தனை உருவம் மாற்றி?’ |
இன்று நன்று ஓர் உபாயத்தின் உறுதி உணர்த்துவென் - இன்றே நல்லதாகிய ஒப்பற்ற உபாயத்தினால் உனக்கு உறுதியாவது ஒரு பொருள் உணர்த்துவேன்; சீதை தானே புணர்வது மாயை புணர்த்துவென் - சீதை தானே வந்து உன்னைச் சேர்வதற்குரிய மாயைச் செயலைச் செய்வேன்; ஓர் வினையம் போற்றி - ஒப்பில்லாத வஞ்சனையைப் போற்றிச் செய்து; மருத்தனை உருவம் மாற்றி - மருத்தன் என்னும் அரக்கனைச் சனகனாக உருவம் மாற்றி; கணத்து வன் சனகன் தன்னைக் கட்டி கொணர்ந்து காட்டின் - ஒரு நொடியில் அந்த வலிய மாயா சனகனைக் கட்டிக் கொணர்ந்து காட்டினால்; மணத்தொழில் புரியும் அன்றே - உன்னைத் திருமணம் செய்யச் சீதை விரும்புவாள் அன்றே. |
வினையம் - வஞ்சனை; கணத்து - நொடியில். |
(3) |
7635. | என அவன் உரைத்தலோடும், எழுந்து மார்பு இறுகப் புல்லி, ‘அனையவன் தன்னைக் கொண்டு ஆங்கு அணுகுதி, அன்ப!’ என்னா, புனை மலர்ச் சரளச் சோலை நோக்கினன், எழுந்து போனான், வினைகளைக் கற்பின் வென்ற விளக்கினை வெருவல் காண்பான். |
என அவன் உரைத்தலோடும் - என்று அந்த மகோதரன் சொன்ன அளவிலே; எழுந்து மார்பு இறுகப் புல்லி - இராவணன் |