பக்கம் எண் :

 நாகபாசப் படலம் 365

அகல்  ஆசை எங்கும் -  அகலமாகப்   பரந்துள்ள  திசைகளில்
எல்லாம்;  அழியா வில்லைச் செலுத்தி - அழியாத ஒளியைப் பரப்பி;
அல்லைச்  சுருட்டி  -  (அதனால் அங்கு உள்ள) இருளைச் சுருங்கச்
செய்து;  வெயிலைப் பரப்பி - (சூரியனது) ஒளியைப் பரவும் படியாகச்
செய்து  (தன்  திருமேனியின்  செந்நிற  ஒளி விளங்கவும்); விரிகின்ற
சோதி
 - (தன் கருத்து வெண்மையில் இருந்து) விரிந்து வெளிப்படுகிற
ஒளி;  நிலவைத்  திரட்டி -  நிலவு  ஒளியை  ஒன்றாக்கி;  எல்லைக்
குயிற்றி
-  பகலைத்  தோற்றுவித்து;  மிளிர - விளங்கவும்; எரிகின்ற
மோலி
- (தலையில்) ஒளி வெளிப்படுத்துகிற முடி; இடை நின்ற மேரு
எனும்
-  பூமிக்கு     இடையில்    உள்ள    மேருமலை    என்று
கூறப்படுகிற;      அத்தொல்லைப்    பொருப்பின்   -   அந்தப்
பழமையான மலையின்; மிசையே  விளங்கு சுடரோனின் -  மேலே
விளங்குகிற  கதிரவனின்   ஒளியைக்  காட்டிலும்;  மும்மை  சுடர -
மும்மடங்கு மிகுந்து ஒளி வீச.
 
 

                                                 (246)
 

8248.நான் பால் விளங்கு மணி கோடியோடு,
     நளிர் போது, செம் பொன், முதலாத்
தன்பால் இயைந்த நிழல் கொண்டு அமைந்த
     தழுவாது வந்து தழுவ;
மின்பால் இயன்றது ஒரு குன்றம் வானின்
     மிளிர்கின்றது என்ன, வெயிலோன்
தென்பால் எழுந்து, வடபால் நிமிர்ந்து,
     வருகின்ற செய்கை தெரிய;
 

நன்பால்   விளங்கு  -  (தன்)  அழகிய   (கழுத்தின்)  இடத்தில்
விளங்குகின்ற;  கோடி  மணியோடு - கோடிக்கணக்கான மணி பதித்த
மாலைகளோடு;  நளிர் போது - குளிர்ச்சி பொருந்திய பூ மாலைகளும்;
செம்பொன்   முதலாத்   -   சிவந்த  பொன்னாலான  மாலைகளும்
முதலானவையாக;  தன்பால்  இயைந்த  - தன்னிடத்தில்  பொருந்திய;
நிழல் கொண்டு அமைந்த - ஒளி கொண்டு பொருந்திய அணிகலன்கள்
எல்லாம்;  தழுவாது  வந்து தழுவ  - (சிறகடித்து விரைவாகப்  பறந்து
வருவதால் மார்பில்) படாதும் பட்டும் பொருந்தி இருக்கவும்;  மின்பால்
இயன்றது  ஒரு  குன்றம்
- மின்னலால் உண்டாக்கப்பட்ட ஒரு மலை;
வானின் மிளிர்கின்றது என்ன - வானத்தில் தோன்றி விளங்குகின்றது
என்று சொல்லும்படியாக; வெயிலோன் - கதிரவன்; தென்பால் எழுந்து
-