பக்கம் எண் :

366யுத்த காண்டம் 

தெற்குத்   திசையில் உதித்து;  வடபால்நிமிர்ந்து - வடக்கே நிமிர்ந்து
உயர்ந்து; வருகின்ற செய்கை தெரிய - வருகின்ற தன்மை விளங்கவும்
(தொடர்ச்சி அடுத்த பாடலில்)
 

                                                (247)
 

8249.பல் நாகர் சென்னி மணி கோடி கோடி
    பல கொண்டு செய்த வகையால்
மின்னால் இயன்றது எனலாய் விளங்கு
    மிளிர் பூண் வயங்க; வெயில் கால்
பொன்னால் இயன்ற நகை ஓடை பொங்க;
    வன மாலை மார்பு புரள;
தொல் நாள் பிரிந்த துயர் தீர, அண்ணல்
    திரு மேனி கண்டு, தொழுவான்,-
 

பல்நாகர்  சென்னி கோடி கோடி மணி - பலவாய  நாகங்களின்
தலையில்  உள்ள  கோடிக்கணக்கான  மாணிக்கங்கள்;  பல கொண்டு
செய்த  வகையால்
 - பலவற்றைக் கொண்டு செய்துள்ள தன்மையால்;
மின்னால்   இயன்றது   எனலாய்   விளங்கு   -   மின்னலினால்
செய்யப்பட்டுள்ளது  என்று  கூறும்படி  விளங்குகின்ற;   மிளிர் பூண்
வயங்க
- ஒளி வெளியிடும் அணிகலன்கள் விளங்கவும்; வெயில்கால் -
(செவ்விய)   ஒளியை   வெளிப்படுத்துகிற;  பொன்னால்  இயன்ற  -
பொன்னால்  ஆகிய;  நகை  ஓடை  பொங்க  -  பொலிவு  உடைய
நெற்றிப்பட்டம்   ஒளி  வெளியிடவும்; வனமாலை  மார்பு  புரள  -
(பல்வகை   இலைகளால்    தொடுக்கப்பட்ட)   வனமாலை   மார்பில்
அசையவும்;  தொல்  நாள் பிரிந்த  துயர்தீர -  நீண்டநாள் பிரிந்து
இருந்த  துன்பம் நீங்கவும்; அண்ணல் - தலைவன் ஆகிய  இராமனது;
திருமேனி    கண்டு    தொழுவான்  -   திருமேனியைக்  கண்டு
தொழுபவனாயினன்.
 
 

                                                 (248)
 

8250.முடிமேல் நிமிர்ந்து முகிழ் ஏறு கையன்,
     முகில்மேல் நிமிர்ந்து ஒளியான்,
அடிமேல் விழுந்து பணியாமல் நின்ற
     நிலை உன்னி உன்னி அழிவான்,
கொடிமேல் இருந்து, இவ் உலகு ஏழொடு ஏழு
     தொழ நின்ற கோளும் இலனாய்,
படிமேல் எழுந்து வருவான், விரைந்து,
     பல கால் நினைந்து, பணிவான்,-