முடி மேல் நிமிர்ந்து முகிழ் ஏறுகையன் - தலையின் மீது உயர்ந்து குவிதல் பொருந்திய கைகளை உடையவனாய்; முகில் மேல் நிமிர்ந்த ஒளியான் - கருமேகத்தினும் மிக்க நீல நிறம் உடைய (இராமனது); அடிமேல் விழுந்து பணியாமல் - திருவடிகளில் விழுந்து (வெகுநாட்களாக) விழுந்து வணங்காமல்; நின்ற நிலை உன்னி உன்னி அழிவான் - (அந்த இராமன் துன்ப வடிவமாய்) நின்ற நிலையை எண்ணி எண்ணி வருந்துபவனாய்; கொடி மேல் இருந்து - (அவ்வவதார மூலத்தின்) கொடியின் மீது இருந்து; இவ் உலகு ஏழொடு ஏழு தொழ நின்ற - இந்தப் பதினான்கு உலகங்களும் தன்னை வணங்கும் படி நின்ற; கோளும் இலனாய் - பெருமையும் இல்லாதவனாய்; படி மேல் எழுந்து வருவான் - பூமியின் மேல் எழுந்து வருபவனாகிய கருடன்; விரைந்து - வேகமாக (இராமன் இருக்கும் இடம்) வந்து; நினைந்து - (அவனது திருக்கல்யாண குணங்களை) நினைத்து; பலகால் பணிவான் - பலமுறை வணங்கி (அடுத்த பாடலில் முடியும்.) |
(249) |
கருடன் துதி |
| 8251. | ‘வந்தாய் மறைந்து; பிரிவால் வருந்தும், மலர்மேல் அயன்தன் முதலோர்- தம் தாதை தாதை இறைவா! பிறந்து விளையாடுகின்ற தனியோய்! சிந்தாகுலங்கள் களைவாய்! தளர்ந்து துயர் கூரல் என்ன செயலோ? எந்தாய்! வருந்தல்; உடையாய்! வருந்தல்’ என, இன்னி பன்னி மொழிவான்: |
மறைந்து வந்தாய் - (நீ நின் திவ்யமங்கள சொரூபத்தை) மறைத்துக்கொண்டு; (சங்கற்ப மாத்திரையாய் மானிடச் சட்டை தாங்கி) வந்தாய்; பிரிவால் வருந்து - உன் பிரிவினால் வருந்துகிற; மலர் மேல் அயன் தன் முதலோர் தம் - மலரின் மேல் தாங்கி உள்ள அயன் முதலியோருக்குக் காரணன் ஆன; தாதை தாதை - பிதா மகனே; இறைவா - எல்லாப் பொருள்களிலும் அந்தர்யாமியாய்த் தங்கி உள்ளவனே; பிறந்து விளையாடுகின்ற தனியோய் - (வினை வயத்தால் அன்றிச் சங்கல்பத்தால்) பிறந்து (மனித உருவத்துக்கு ஏற்ப நடித்து விளையாடுகின்ற ஒப்பற்ற தலைவனை! சிந்தா |