பக்கம் எண் :

368யுத்த காண்டம் 

குலங்கள்    களைவாய்  -  சரணாகதி    அடைந்தவர்களின்  மனத்
துன்பங்களைப்    போக்குபவனே;   தளர்ந்து  துயர்  கூரல் என்ன
செயலோ
-  நீயே   மனம்  தளர்ந்து  துன்பம்  மிகப்படுதல்  என்ன
செயலோ? எந்தாய்  வருந்தல்  -  எனது   தலைவனே  வருந்தாதே;
உடையாய்  வருந்தல் -   எப்பொருளையும்  சரீரமாக  உடையவனே
வருந்தாதே; என இன்ன - என்று இத்தன்மையான சொற்கள் பலவற்றை;
பன்னி மொழிவான் - திரும்பத் திரும்பக் கூறுபவனாயினான்,

கருடன் உண்மையை இராமனுக்குத் தெரிவித்துத் தேற்றுவது போல்
பாடல்கள்  அமைந்துள்ள  தன்மையை உணர்ந்து கொள்க. இறைவன்
மானிட  உருத்தாங்கி  வந்து மானுட இன்பதுன்பங்களை அனுபவித்து
மானிட  வெற்றியின்  கொடுமுடியாய் உயர்வதை விளக்க வந்த கம்பர்
இவ்வாறு தானே பாடமுடியும்.

                                                (250)

8252.‘தேவாதிதேவர் பலராலும் முந்து
     திருநாமம் ஓது செயலோய்
மூவாது எந் நாளும் உலகு ஏழொடு ஏழும்
     அரசாளும் மேன்மை முதல்வா!
மேவாத இன்பம் அவை மேவி, மேவ
     நெடு வீடு காட்டு அம் முடியாய்!
ஆவாய்! வருந்தி அழிவாய்கொல்!-ஆர், இவ்
     அதிரேக மாயை அறிவார்?

தேவாதி தேவர் - தேவர், பிரமன், உருத்திரன் முதலிய தலைமைத்
தேவர்கள்    போன்ற   பலரும்;   முந்து   -   ஒருவரை   ஒருவர்
முந்திக்கொண்டு;  திருநாமம் ஓது செயலோய் - நின்  திருநாமத்தைச்
சொல்லித்  துதிக்கும்  படியாக உள்ளவனே!  மூவாது - மூப்படையாது;
(இளமையுடன்  இருந்து)  எந்நாளும் - எப்பொழுதும்; உலகு ஏழொடு
ஏழும்
 - பதினான்கு உலகங்களையும்; அரசாளும் மேன்மை முதல்வா
-  (பாதுகாத்து) அரசு செலுத்துகிற மேன்மை  பொருந்திய  தலைவனே;
மேவாத  இன்பம்  அவை  மேவி -  (உன்னைச் சரண் புக்கவர்கள்)
பிறரால் அடையமுடியாத பேரின்பங்களை அடைந்து; மேவ நெடு வீடு
காட்டு  அம்  முடியாய்
 -  (இறுதியில்)  (உன்னை)  அடைய முக்தி
உலகத்தைக்  காட்டும்  (அழகிய  முதல்  தலைவனாய்);  ஆவாய்  -
ஆனவனே; வருந்தி அழிவாய் கொல் - (இத்தகைய நீ) வருத்தம்