கொண்டு அழிவாய் போலும் இவ் அதிரேக மாயை - இந்த (உன்னுடைய) மிகுதியான மாயச்செயலை; அறிவார் யார் - அறியத்தக்கவர் யார்? | (251) | | 8253. | ‘எழுவாய், எவர்க்கும் முதல் ஆகி, ஈறொடு இடை ஆகி; எங்கும் உளையாய், வழுவாது எவர்க்கும் வரம் ஈய வல்லை; அவரால் வரங்கள் பெறுவாய்; தொழுவாய், உணர்ச்சி தொடராத தன்மை உருவாய் மறைந்து, துயரால் அழுவாய் ஒருத்தன் உளைபோலும்!-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? | எவர்க்கும் - எல்லா உலகங்களுக்கும்; முதல் ஆகி - படைக்கும் முதல் காரணனாகியும்; ஈறொடு - அழிக்கும் காரணன் ஆகியும்; இடை ஆகி - காக்கும் காரணன் ஆகியும்; எழுவாய் - (சங்கர்ஷண பிரத்தியும்ன, அநிருத்தர்களாய்த்) திருப்பாற்கடலில் தோன்றுவாய்; எங்கும் உளையாய் - எல்லாப் பொருள்களிலும் அந்தர்யாமியாய் வியாபித்து நின்று; வழுவாது - தவறாமல்; எவர்க்கும் - உபாசிக்கும் எல்லோருக்கும்; வரம் ஈயவல்லை - (வேண்டிய) வரங்களைக் கொடுக்கும் வல்லமை உடையவனே; உணர்ச்சி தொடராத தன்மை உருவாய் மறைந்து - இத்தகு (ஆற்றலை உடைய நீ) முற்றுணர்வு உண்டாகாத தன்மை உடைய மனித உருவில் மறைந்து நின்று; தொழுவாய் - (உன்னைத் தொழும் தேவர்களைத்) தொழுது நிற்பாய்; அவரால் வரங்கள் பெறுவாய் - அத்தேவர்களால் (வேண்டிய) வரங்களைப் பெற்று நிற்பாய்; துயரால் அழுவாய் - துன்பத்தால் (வருந்தி) அழுவாய்; ஒருத்தன் உளை போலும் - (இத்தகைய வியத்தகு நிலை உடைய) நீ ஒருவன் இருக்கின்றாய் போலும்; இவ் அதிரேக மாயை - இந்த (உன்னுடைய) மிகுதியான மாயச் செய்கையை; அறிவார் யார் - அறிபவர் யாவர். | திருமாலின் வியூகமூர்த்திகளில் சங்கர்ஷணன் என்பவர் ஆமோதம் என்னும் இடத்தில் ஞானம், பலம் என்ற இரண்டு குணங்களைத் தம்மிடத்தில் கொண்டு அழித்தல் தொழிலையும் பிரத்யும்னன் என்பவர் பிரமோதம் என்னும் இடத்தில் ஐசுவரியம், வீரியம் என்ற இரண்டு குணங்களைத் தம்மிடத்தில் கொண்டு |
|
|
|