படைத்தல் தொழிலையும், அநிருத்தர் என்பவர் சம்மோதம் என்னும் இடத்தில் சக்தி, தேஜஸ் என்ற குணங்களைத் தம்மிடத்தில் கொண்டு காத்தல் தொழிலையும் மோட்சம் அளித்தலையும் செய்கின்றனர் எனக் கம்பர் முதல் வரியில் குறிப்பிடுகிறார்.
| திருமால் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலைச் செய்ய சங்கர்சண, பிரத்யும்ன, அநிருத்த மூர்த்திகளாகி, வழிபடுவோர்க்கு அருள் செய்து நிற்கும் வியூக நிலையை ‘எழுவாய் எவர்க்கும்... வரயேவல்லை’ என்றதனாலும் கடந்தொறும் மறைந்து பரந்து நிற்கும் அந்தர்யாமி நிலையை ‘எங்கும் உளையாய்’ என்றதனாலும் பாவத்தை அழித்து அறத்தை நிலை நாட்டும் தன்மையை யாதன விபவாதார நிலையை அவரால் வரங்கள் பெறுவாய் - அழுவாய்’ என்றதனாலும் குறித்தனர் எனலாம்.
| (252)
| | 8254. | ‘உன் ஒக்க வைத்த இருவர்க்கும் ஒத்தி; ஒருவர்க்கும் உண்மை உரையாய்; முன் ஒக்க நிற்றி; உலகு ஒக்க ஒத்தி; முடிவு ஒக்கின், என்றும் முடியாய்; “என் ஒக்கும், இன்ன செயலோ இது?” என்னில், இருள் ஒக்கும் என்று விடியாய்; அந் நொப்பமேகொல்? பிறிதேகொல்?-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்?
| உன் ஒக்க வைத்த இருவர்க்கும் ஒத்தி - (காத்தல் தொழிலைச் செய்யும்) உன்னுடன் ஒருங்கு வைத்துப் பேசப்படுகிற (அழித்தல் படைத்தல் என்ற தொழில்களைச் செய்கிற உருத்திரன் பிரமன்) ஆகிய இருமூர்த்திகளுடன் ஒத்து (அரி அரன் அயன் என மூவராய்ப்) பொருந்தி உள்ளாய்; ஒருவர்க்கும் உண்மை உரையாய் - (ஆனால் அவர்கள் ஒருவருக்கும்) உன் உண்மைத் தன்மையை உரைக்கின்றாயல்லை; முன் ஒக்க நிற்றி - (அவர்களில் நீயே) முதல் மூர்த்தியாய் நிற்கிறாய்; உலகு ஒக்க ஒத்தி - உலகில் உள்ள அனைத்துப் பொருள்களிலும் அந்தர்யாமியாய் ஒத்து நிற்கின்றாய்; முடிவு ஒக்கின் - (இப்பிரபஞ்சத்தை அழிக்க நீ திருவுள்ளம் கொண்டால் அவற்றிற்கு) அவ்வழிவு சங்கற்ப மாத்திரையானே பொருந்தும்; என்றும் முடியாய் - (நீ) எப்பொழுதும் அழியாமல் இருப்பாய்; இன்ன செயலோ இது என் ஒக்கும் என்னின் - (உனது) இத்தன்மையான இச்செயலாகிய இது எத்தன்மைத்து என்று ஒருவர் எண்ணிப் பார்த்தால்; இருள் ஒக்கும் என்று விடியாய் - |
|
|
|