8257. | ‘மீளாத வேதம், முடிவின்கண், நின்னை மெய்யாக மெய்யின் நினையும்; “கேளாத” என்று “பிற” என்று, சொன்ன கெடுவார்கள் சொன்ன கடவான், மாளாத நீதி இகழாமை நின்கண் அபிமானம் இல்லை, வறியோர்; ஆளாயும் வாழ்தி; அரசாள்தி!-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? | மீளாத வேதம் - (மெய்யில் இருந்து விலகி) மீளுதல் இல்லாத வேதங்களின்; முடிவின் கண் - முடிபொருளாய் உள்ள (வேத சிகையாய் விளங்கும்) உபநிடதங்கள்; நின்னை - உன்னை (பற்றிக் கூறும் இடத்து); மெய்யாக - உண்மைப் பொருளாகக் கொண்டு (உள் பொருள் என்று); மெய்யின் நினையும் - உண்மை மெய்யுணர்வாகிய பதிஞானத்தால் ஆய்ந்து கூறும்; கேளாத என்று - (அவ்வாறு இருக்கும் போது) (நான் கடவுளைக் கண்ணால் கண்டுள்ளேன் என்று ஒருவர் கூறும்கூற்றுக்) கேள்விப் படாத (கூற்று) என்றும்; பிற என்று சொன்ன - எனவே இக்கூற்று வேறு காரணத்தால் கூறப்பட்டது (கடவுள் உண்மையில் இல்லை) என்றும் கூறுகிற கூற்று; கெடுவார்கள் சொன்ன - அறிவில்லாத நாத்திகர்கள் சொன்னதாகும்; கடவார் - தாங்கள் கூறிய கூற்றினைக் கடவாது அவர்கள்; மாளாத நீதி இகழாமை நின்கண் அபிமானம் இல்லை - (ஒரு பொழுதும்) பழுதுபடாத (சாத்திர) நீதி முறை பிறழாமலும், உன்னிடம் பக்தி செலுத்தாமலும் கெட்டு அழிவார்கள்; வறியோர் ஆளாயும் வாழ்தி - (ஆனால் நீயோ) பத்துடை அடியவர்க்கு எளிய ஏவல் ஆளாகவும் வாழ்கிறாய்; அரசாள்தி - (அனைத்து உலகங்களையும்) அரசாளலும் செய்கிறாய்; இவ் அதிரேக மாயை - இந்த மிகுதியான மாயச் செயலை; ஆர் அறிவார் - யார் அறிவார்கள். | இப்பாடலில் கடவுள் என்று ஒரு பொருள் இல்லை என்று கூறும் நாத்திகர்களை மறுத்துத் திருமாலின் சௌலப்யம், பரத்துவம் ஆகிய தன்மைகளைக் கவிஞர் விளக்கி உள்ளார். பத்துடை அடியவர்க்கு எளியனாய்ப் பிறர்க்கு அரிய வித்தகனாய் விளங்கும் தன்மையின் விளக்கம் இங்குக் கூறப்படுகிறது. | (256) | 8258. | ‘சொல் ஒன்று உரைத்தி; பொருள் ஆதி; தூய மறையும் துறந்து, திரிவாய்; |
|
|
|