பக்கம் எண் :

 நாகபாசப் படலம் 375

அறம்தான் நிறுத்தல் அரிது ஆக!-ஆர், இவ்
    அதிரேக மாயை அறிவார்?

 

பிறவாமல் நல்கு பெரியோய் - (பத்துடை அடியவர்கள்) மற்றீண்டு
வாராப் பிறவாத பெருநெறி தருகின்ற பெரியவனே! மறந்தாயும் ஒத்தி -
(நீ)  (உன்   உண்மைத்   தன்மையை)  மறந்தவன்  போலவும்  காட்சி
தருகிறாய்;  மறவாயும்  ஒத்தி  -  (அவதார  நோக்கமாகிய பாவத்தை
அழிக்க  எண்ணியிருப்பதால்)  உன்  உண்மை  நிலையை மறவாதவன்
போலவும்  இருக்கிறாய்;  மயல்  - (இத்தன்மையான  உனது)  மாயைச்
செயலை;  ஆரும்  -  (உலகத்தவர்)   யாவரும்;  யானும்  -  நானும்;
அறியோம்  - அறிய முடியாதவர்களாய் உள்ளோம்; துறந்தாயும் ஒத்தி
- (பற்றற்று இருத்தலால்) துறந்தவன் போலவும்  இருக்கிறாய்; துறவாயும்
ஒத்தி
- (தம்பி கட்டுண்டமை கண்டு வருந்தி அழுதலால்)  துறவாதவன்
போலவும்  இருக்கிறாய்;  ஒரு தன்மை சொல்ல அறியாய் - (இவ்வாறு
இருத்தலினால்) ஒரு தன்மை உடையவன் என்று சொல்ல  அரியவனாக
விளங்குகிறாய்;  பிறந்தாயும்  ஒத்தி - (தசரதன் மதலையாய்த் தாரணி
வந்ததால்)  பிறந்தவன்  போலவும்  இருக்கிறாய்;  பிறவாயும் ஒத்தி -
(வினை    வசத்தால்     பிறவாமையின்)    பிறவாதவன்   போலவும்
விளங்குகிறாய்;  அறம் தான் நிறுத்தல்  அரிது  ஆக  -  அறத்தை
இவ்வுலகில்  நிலை  நிறுத்தல்  அருமை  ஆக இருப்பதால்  (அதனை
நிலை  நிறுத்த  மானிடச்  சட்டை தாங்கி வந்தவனே); இவ் அதிரேக
மாயை
-  இந்த  மிகுதியான மாயச்  செயலை; ஆர் அறிவார் - யார்
அறிவார்கள்.
 

தன்   சொரூபத்தை மறந்தும் மறவாதும், பிறந்தும் பிறவாதும் உள்ள
இறை   நிலை   இப்பாடலில்   விளக்கிக்    கூறப்படுகிறது.  திருமால்
மனிதனாய்  அவதரித்து மனிதனைப் போலவே இன்ப   துன்பங்களுக்கு
ஆட்பட்டமை கொண்டு இவ்வாறு கூறினார் என்க.
 

                                                (258)
 

8260.‘வினை வர்க்கம் முற்றும் உடனே படைத்தி;
    அவை எய்தி, என்றும் விளையா,
நினைவர்க்கு, நெஞ்சின் உறு காமம் முற்றி,
    அறியாமை நிற்றி, மனமா;
முனைவர்க்கும் ஒத்தி, அமரர்க்கும் ஒத்தி,
    முழு மூடர் என்னும் முதலோர்