பக்கம் எண் :

376யுத்த காண்டம் 

அனைவர்க்கும் ஒத்தி, அறியாமை-ஆர், இவ்
    அதிரேக மாயை அறிவார்?

 

வினைவர்க்கம்  முற்றும் - (உயிர்களின் பாவ புண்ணியங்களாகிய)
இருவினைகளின்  தொகுதிகளுக்கு  உரியபடி; உடனே  படைத்தி  -
(அந்த   உயிர்களை   உடனே   தக்க)   உடல்   எடுக்கச்   செய்து
படைக்கின்றாய்;  அவை  எய்தி  -  அந்த   உடம்புகளை அடைந்து;
நினைவர்க்கு  -  (உன்  திருவடியையே)  நினைக்கும்  பக்தர்களுக்கு;
என்றும்  - எப்பொழுதும்;  நெஞ்சின் உறுகாமம் முற்றி - (அவர்கள்)
மனத்தில்     உள்ள    (எவ்வகை)   விருப்பத்தையும்   நிறைவேற்றி;
அறியாமை  நிற்றி -  (அவர்கள்)  அறியாமல் நிற்கின்றாய்; மனமா -
மனமாகவும்     (மறைந்துள்ளாய்);   முனைவர்க்கும்    ஒத்தி    -
முனிவர்களுக்கும்   ஒத்து   விளங்குகிறாய்;  அமரர்க்கும்  ஒத்தி  -
தேவர்களுக்கும்  ஒத்து விளங்குகிறாய்; முழுமூடர் என்னும் முதலோர்
அனைவர்க்கும்
  -  முழு  அறிவிலிகள்  என்னும்  மற்ற  பிறராகிய
அனைவருக்கும்; அறியாமை  ஒத்தி  - அறிய முடியாத  தன்மையால்
ஒத்து விளங்குகிறாய்; இவ் அதிரேக மாயை - இந்த மிகுதியான மாயச்
செயலை; ஆர் அறிவார் - யார் அறிவார்கள்.
 
 

மலத்தால்   இலயித்த  ஆன்மாக்களை  வினைக்கேற்ப  உடம்பு
அருளிய   இறைவன்   உடம்பு   எடுத்த  ஆன்மாக்களின்  ஈடேற்ற
நினைப்பிற்கு  ஏற்ப  இருவினையை அழித்து முத்தி அளிக்கின்றான்.
எனினும்   அவ்வான்மாக்கள்   அச்செயலை  வெளிப்பட  உணர்ந்து
கொள்ள  முடிவதில்லை.  என இறைத்தன்மையும் செயலும் கூறியபடி
காண்க.
 

                                                (259)
 

8261.‘எறிந்தாரும், ஏறுபடுவாரும், இன்ன
     பொருள் கண்டு இரங்குபவரும்,
செறிந்தாரின் உண்மை எனல் ஆய தன்மை
     தெரிகின்றது, உன்னது இடையே;
பிறிந்தார் பிறிந்த பொருளோடு போதி;
     பிறியாது நிற்றி; பெரியோய்!
அறிந்தார் அறிந்த பொருள் ஆதி-ஆர், இவ்
     அதிரேக மாயை அறிவார்?
 

பெரியோய்   -   பெரியவனே;  எறிந்தாரும் - (படைக்கலங்களை)
எறிபவர்களும்;   ஏறு படுவாரும் - (அந்தப் படைக்கலங்களால்) காயம்
படுபவர்களும்; இன்ன பொருள் கண்டு இரங்குபவரும் -