இத்தகைய செயலைக் கண்டு இரங்குபவர்களும்; செறிந்தாரின் - (இங்கு இவ்வுலகில்) நெருங்கி (இருந்து) வாழ்பவர்கள் இடத்திலும்; உண்மை எனல் ஆயதன்மை - (நீ) ஒருங்கு கலந்திருப்பது உண்மை என்ற செய்தி; உன்னது இடையே தெரிகின்றது - உன்னிடத்தில் தெரிகின்றது; பிறிந்தார் பிறிந்த பொருளோடு போதி - அறிவில் இருந்து பிரிந்தவர்கள் நீக்கியுள்ள ஞானமாகிய பொருளுடன் நீயும் (அவர்களிடம் இருந்து) பிரிந்து போகின்றாய்; பிறியாது நிற்றி - அவ்வாறு பிரிந்து இருந்தாலும் கூட அவர்கள் இடத்திலும் அந்தர்யாமியாகப் பிரியாமல் நிற்கிறாய்; அறிந்தார் அறிந்த பொருள் ஆதி - தத்துவ ஞானமுடையவர்கள் (உண்மை உணர்வால்) ஆய்ந்து அறிந்த மெய்ப்பொருளாகவும் விளங்குகிறாய்; இவ் அதிரேகமாயை - இந்த மிகுதியான மாயையை; ஆர் அறிவார் - யார் அறிவார்கள். |
எல்லாப் பொருள்களிலும் வேறுபாடு இன்றி ஒரு தன்மைத்தாய் அந்தர்யாமியாய் இறைவன் கலந்தும் கரைந்தும் உள்ளான் என்றும், அவன் உண்மை அறிவினர்க்கே விளங்கித் தோன்றும் என்றும் அறிவற்ற அஞ்ஞானிகளுக்கு விளங்கித் தோன்ற மாட்டாது என்றும் விளக்கிக் கூறியவாறு. |
(260) |
8262. | ‘பேர் ஆயிரங்கள் உடையாய்; பிறந்த பொருள்தோறும் நிற்றி; பிரியாய்; தீராய்; பிரிந்து திரிவாய்; திறம்தொறும் அவை தோறும் என்று தெளியாய்; கூர் ஆழி அம் கை உடையாய்; திரண்டு ஓர் உரு ஆதி; கோடல் உரிபோல், ஆராயின், ஏதும் இலையாதி-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்?’ |
பேர் ஆயிரங்கள் உடையாய் - ஆயிரம் திருப்பெயர்களை உடையவனே; பிறந்த பொருள் தோறும் - தோன்றிய பொருள்கள் இடத்தில் எல்லாம்; பிரியாய் நிற்றி - பிரியாமல் கலந்து நிற்கின்றாய்; தீராய் - அழிவு அற்றவனே; பிரிந்து திரிவாய் - பல்வேறு அவதாரங்களால் உன் உண்மை சொரூபத்தில் இருந்து பிரிந்து வந்து திரிகின்றாய்; திறம் தொறு அவை தோறும் என்று தெளியாய் - அந்த அவதாரங்களில் எல்லாம் அப்பொருள்கள் உன்னைத் தம் இனம் என்று மயங்கி நிற்றல் அன்றி உன் உண்மை |