பக்கம் எண் :

378யுத்த காண்டம் 

நிலையை    அறியும்  படி  தெளியப்படாத    நிலையில்   உள்ளாய்;
அம்கை  கூர் ஆழி உடையாய் -  அழகிய  கைகளில்  கூர்மையான
சுதர்சனம்  என்னும்   சக்கரப்  படையைக்   கைக்கொண்டு  உள்ளாய்;
திரண்டு  ஓர்  உரு ஆதி - அனைத்துப் பொருள்களும் திரண்டு ஓர்
உருவம்   ஆகிறாய்;  ஆராயின் -  எண்ணிப்  பார்த்தால்;  கோடல்
உரிபோல் ஏதும் இலையாதி
- வெண் காந்தள் கிழங்கை உரிப்பதைப்
போல  ஒன்றும் இல்லாதவன் ஆகிறாய்; இவ் அதிரேகமாயை - இந்த
மிகுதியான மாயச்செயலை; ஆர் அறிவார் - யார் அறிவார்கள்.
 

திருமால்   ஒவ்வொரு  அவதாரத்திலும்  அந்தந்த அவதாரத்திற்கு
ஒத்த  செயலும்  பண்பும்  கொண்டு நடிப்பதால் திறம்  தொறு அவை
தோறும்  என்று  தெளியாய்  என்றார்.  முன்  கூறப்பட்ட பதினொரு
பாடல்கள் ஆர் இவ் அதிரேகமாயை அறிவார் என முடிந்தன.
 

                                                (261)
 

                                         நாக பாசம் நீங்குதல்
 

8263.என்று, இன்ன பன்னி அழிவான், எறிந்த
    எரி சோதி கீற, இருள் போய்,
பொன் துன்னி அன்ன வெயில் வீசுகின்ற
    பொருள் கண்டு, நின்ற புகழோன்
நின்று உன்னி உன்னி, ‘இவன் யாவன்?’
    என்று நினைகின்ற எல்லை, நிமிரச்
சென்று, உன்னும்முன்னர், உடன் ஆயினான், இவ்
    உலகு ஏழும் மூடு சிறையான்.
 

என்று  இன்ன பண்ணி - என்று  இவ்வாறான  சொற்களைப் பல
முறை   கூறித்  (துதித்து);  அழிவான்  -  மனமழிபவனாகிய  கருடன்;
எறிந்த  எரி  சோதிகீற  -  (வந்ததனால்)   வீசிய  உடம்பின்  ஒளி
கிழித்ததனால்; இருள்போய் - இருட்டு நீங்கி; பொன் துன்னி அன்ன
-  பொன்னின்  ஒளி  நெருங்கியது  போல; ஒளி வீசுகின்ற பொருள்
கண்டு
 - (எங்கும் சிவந்த) ஒளி பரவி  வீசுகின்ற  தன்மையைக் கண்டு;
நின்ற புகழோன் - (மாறாது நிலை பெற்று) நிற்கும் புகழுக்கு உரியவன்
ஆகிய இராமன்; நின்று உன்னி உன்னி - (அதைப் பார்த்துக்கொண்டு)
நின்று எண்ணி எண்ணி; இவன் யாவன் என்று நினைக்கின்ற எல்லை
-  இவன்  யார்?  என்று  நினைத்து  நிற்கின்ற பொழுது;  இவ் உலகு
ஏழும் மூடு சிறையான்
- இந்த உலகங்கள் ஏழினையும் மூடும் படியாக
மிக விரித்த