சிறகுகளை உடைய அந்தக் கருடன்; நிமிரச் சென்று - நேராகச் சென்று; உன்னும் முன்னம் உடன் ஆயினான் - நினைப்பதற்கு முன்பே இராமனிடம் சென்று சேர்ந்தான். |
பொன் துன்னி அன்ன வெயில் - பொன் போன்ற நிறமுடைய கருடனின் உடம்பில் இருந்து வருகின்ற ஒளி. |
(262) |
8264. | வாசம் கலந்த மரை நாள நூலின் வகை என்பது என்னை?-மழை என்று ஆசங்கை கொண்ட கொடை மீளி அண்ணல் சரராமன் வெண்ணெய் அணுகும், தேசம் கலந்த மறைவாணர், செஞ் சொல் அறிவாளர், என்று இம் முதலோர் பாசம் கலந்த பசிபோல், அகன்ற- பதகன் துரந்த உரகம். |
பதகன் துரந்த உரகம் - பாதகனாகிய இந்திரசித்தன் (இலக்குவன் மீது வானரப் படைமீதும்) செலுத்திய பாம்புக்கணை; மழை என்று ஆசங்கை கொண்ட - மேகங்கள் என்று ஐயம் கொள்ளுவதற்கு இடமாக உரிய; கொடை மீளி அண்ணல் - கொடை கொடுப்பதில் வலிமை மிக்க பெரியோன் ஆகிய; சரராமன் - சடையப்ப வள்ளலுக்கு உரிய; வெண்ணை அணுகும் - திருநெல்வெண்ணெய் எனும் ஊரை நெருங்கிச் சேர்ந்த; தேசம் கலந்த மறை வாணர் - தேசஸ் ஆகிய ஒளி பொருந்திய அந்தணர்களும்; செஞ்சொல் அறிவாளர் - செவ்விய கூரிய சீரிய செஞ்சொல் புலவர்களும்; என்று இம்முதலோர் - என்று இவர்களை முதலாகக் கொண்ட சுற்றத்தார்கள்; பாசம் கலந்த பசி போல் - அடைந்துள்ள பசிபோல்; அகன்ற - இருந்த இடம் தெரியாது மறைந்து விட்டது; (அவ்வாறு துண்டுபட்டு அழிந்து மறைந்த நாகங்களை) வாசம் கலந்தமரை - மணம் பொருந்திய தாமரை மலரினது; நாள நூலின் வகை - தண்டின் உள்ளே உள்ள மெல்லிய நூலின் தன்மையை அடைந்து விட்டது; என்பது என்னை - என்று சொல்லுவது என்ன சிறப்பு உள்ளது. |
இராம சரிதத்தின் இடையில் தன்னை ஆதரித்துக் காத்த வள்ளலின் சிறப்பைப் பாடிய கம்பரின் செய்நன்றி மறவாச் செம்மை உள்ளத்தை எண்ணுக. நேரடியாக வள்ளலைச் சிறப்பித்தல், மறை |