பக்கம் எண் :

380யுத்த காண்டம் 

முகமாக   உவமை  கூறிச்  சிறப்பித்தல் என்ற இரண்டு வகையாகக்
கவிஞர் இக்காப்பியத்தில் சடையப்ப வள்ளலைச் சிறப்பித்து உள்ளார்.
 

வெண்ணெய் - திருநெல்வெண்ணை என்னும் தலம். தேவாரப்பாடல்
பெற்றது. சிக்கல் என வழங்கும்.
 

                                                (263)
 

8265.பல்லாயிரத்தின் முடியாத பக்கம்
     அவை வீச, வந்து படர் கால்
செல்லா நிலத்தின் இருள்ஆதல் செல்ல,
     உடல் நின்ற வாளி சிதறுற்று,
எல்லா விதத்தும் உணர்வோடு நண்ணி
     அறனே இழைக்கும் உரவோன்
வல்லான் ஒருத்தன் இடையே படுத்த
     வடு ஆன, மேனி வடுவும்.
 

பல்லாயிரத்தின்  முடியாத - பல  ஆயிரக்கணக்கிலும்  அடங்கி
முடியாத;  பக்கம்   அவை  வீச  -  இறகுகளை  உடைய  இரண்டு
சிறகுகளும்  அடித்துக்  கொள்வதால்; வந்து  படர்  கால்  -  வந்து
பரவுகின்ற   காற்றானது;  செல்லா  நிலத்தின்  -  (நாகக் கணையால்
கட்டுண்டு   விழுந்து  கிடப்பவர்களின்  பெரும்  குவியலால்)  செல்ல
முடியாமல் உள்ள நிலத்தில் நெருங்கி உள்ள; இருள் ஆதல் செல்ல -
இருட்டு   நீங்கிப்  போகும்படி  வீசுதலினால்; உடல்  நின்ற  வாளி
சிதறுற்று
 -  (இலக்குவன்  முதலிய  வானர  வீரர்களுடைய) உடலில்
குத்தி   நின்ற   அம்புகள்   சிதறிப்  போயின;  மேனி  வடுவும்  -
(அவர்களின்  உடலங்களில்  ஏற்பட்ட  பழியாகப்   பொருந்திய உடல்
தழும்புகளும்); எல்லா  விதத்தும் - எல்லா வகையிலும்; உணர்வோடு
நண்ணி
 - அறிவோடு பொருந்தி; அறனே இழைக்கும் உரவோன் -
அறத்தையே  செய்யும்  மன   வலிமை  மிக்க; வல்லான் - வல்லமை
உடைய; ஒருத்தன் இடையே படுத்த - ஒரு ஞானியின் பால் இடையில்
தோன்றிய; வடுவான - பாவத்தைப் போல் நீங்கின.
 
 

ஞானிகளின்   பாவம்   அவன்   அருளால்   நீங்குவது  போல,
இலக்குவன்  முதலியோர்க்கும் நாக பாசமும், தழும்புகளும் கருடனின்
சிறகுக்காற்றால் நீங்கின என்பது கருத்து.
 

                                               (264)
 

                             அனைவரும் உயிர் பெற்று எழுதல்
 

8266.தருமத்தின் ஒன்று ஒழுகாத செய்கை
    தழுவிப் புணர்ந்த தகையால்,