பக்கம் எண் :

 நாகபாசப் படலம் 381

உரும் ஒத்த வெங் கண், வினை தீய, வஞ்சர்
    உடல் உய்ந்தது இல்லை; உலகின்
கருமத்தின் நின்ற கவி சேனை வெள்ளம்,
    மலர்மேல் அவ் வள்ளல் கடை நாள்
நிருமித்த என்ன, உயிரோடு எழுந்து
    நிலை நின்ற, தெய்வ நெறியால்.

 

தருமத்தின்  ஒன்றும்   ஒழுகாத   செய்கை   -   அறவழியில்
எப்பொழுதும்   சிறிதுகூட   நடக்காத  தன்மை;   தழுவிப்  புணர்ந்த
தகையால்
- பொருந்தி உள்ள காரணத்தினால்; உரும் ஒத்த வெங்கண்
-    இடியைப்     போன்ற   கொடிய   கண்களையும்;   வினை   -
வஞ்சனையையும்; தீய - தீய செயல்களையும் கொண்ட;  வஞ்சர் உடல்
உய்ந்தது  இல்லை
 -  வஞ்சகர்களாகிய  (அரக்கர்களின்)  உடம்புகள்
உயிர்  பெற்று  எழவில்லை;   மலர்  மேல் அவ்வள்ளல்  - தாமரை
மலரின் மேல் தங்கியுள்ள அந்தப் பிரமதேவன்;  கடை நாள் நிருமித்த
என்னை
 -  ஊழி  முடிவான  பிற்காலத்தில்  படைத்த  (உயிர்களைப்)
போல; உலகின் கருமத்தின் நின்ற - உலகத்தில் (பாவத்தைப் போக்கி
அறத்தைத்  தலை நிறுத்தும்) காரியத்தில் ஈடுபட்டு நின்ற;   கவிசேனை
வெள்ளம்
  -  வானரப்படை  வெள்ளங்கள்;  தெய்வ  நெறியால் -
இறைவனின்  சங்கற்பத்தால்; உயிரோடு எழுந்து நிலை நின்ற - உயிர்
பெற்று எழுந்து ஊக்கத்தோடு களத்தில் நிலையாக நின்றன.
 

பாவம்   மேற்கொண்ட  அரக்கர் உயிர் பெறாமையும் அற வழியில்
நின்ற இலக்குவன் முதலியோர் பிழைத்தமையும்  இப்பாடலில் கூறினார்.
நாகபாசத்தால  கட்டுண்ட  இலக்குவனும்  வானர வீரர்களும், கருடன்
வருகையால்  உயிர்  பெற்று  எழுதலும், அவ்வாறு இன்றி இலக்குவன்
அம்புகளால்    உயிரிழந்த   அரக்க   வீரர்   உயிர்   பெறாமையும்
கூறப்பட்டது. உலகின் கருமம் - அறவழி, கடைநாள் நிருமித்த - ஊழி
முடிவான பிற்காலத்தில் படைத்து.
 

                                                (265)
 

                                           இராமன் மகிழ்தல்
 

8267.இளையான் எழுந்து தொழுவானை, அன்பின்
     இணை ஆர மார்பின் அணையா,
‘விளையாத துன்பம் விளைவித்த தெய்வம்
     வெளி வந்தது’ என்ன வியவா,
கிளையார்கள் அன்ன துணையோரை, ஆவி
     கெழுவா, எழுந்து தழுவா,