| முளையாத திங்கள் உகிரான் முன் வந்து, முறை நின்ற வீரன் மொழிவான்; |
முறை நின்ற வீரன் - அறமுறையில் நின்ற வீரனாகிய இராமன்; எழுந்து இளையான் தொழுவானை - மயக்கம் நீங்கி எழுந்து வணங்குபவனான இளையவனாகிய இலக்குவனை; அன்பின் - அன்பு மிகுதியால்; இணை ஆர மார்பின் அணையா - இணைந்த மாலைகள் பொருந்தி உள்ள மார்பில் இறுகத் தழுவி; விளையாத துன்பம் விளைவித்த தெய்வம் - வரக்கூடாத பெருந் துன்பத்தை உண்டாக்கிய தெய்வம்; வெளி வந்தது என்ன - கருடன் வடிவில் வெளி வந்தது என்று கூறி; வியவா - வியந்து; கிளையார்கள் அன்ன - உறவினர்கள் போன்ற; துணையோரை - துணைவர்களாகிய வானர வீரர்களை; ஆவி கெழுவா எழுந்து தழுவா - உயிர் ஒன்றாகுமாறு நெருக்கமாக எழுந்து தழுவி; முளையாத திங்கள் உகிரான் முன்வந்து - பிறைச் சந்திரன் போன்ற நகங்களை உடைய கருடனுக்கு முன்னால் வந்து; மொழிவான் - (இவற்றைக்) கூறினான். |
வெளி வந்தது - கருட வடிவில் வெளி வந்தது, திங்கள் உகிரான் - சந்திரனைப் போன்ற நகங்களை உடைய கருடன் |
(266) |
இராமன் கருடனிடம் பேசுதல் |
| 8268. | ‘ஐய! நீ யாரை? எங்கள் அருந் தவப் பயத்தின் வந்து, இங்கு எய்தினை; உயிரும் வாழ்வும் ஈந்தனை; எம்மனோரால் கையுறை கோடற்கு ஒத்த காட்சியை அல்லை; மீட்சி செய் திறம் இலையால்’ என்றான்-தேவர்க்கும் தெரிக்க ஒணாதான். |
தேவர்க்கும் தெரிக்க ஒணாதான் - தேவர்களும் கூட(த் தன் சொரூபத்தை) அறிய முடியாது உள்ளவனாகிய இராமன்; ஐய - (கருடனைப் பார்த்து) ஐயா; நீ யாரை - நீ யார்; எங்கள் அருந்தவப் பயத்தின் - நாங்கள் செய்த மிக்க தவத்தின் பயனால்; இங்கு வந்து எய்தினை - இங்கு வந்து அடைந்தாய்; உயிரும் வாழ்வும் ஈந்தனை - (நாகக் கணையால் இறந்தவர்களுக்கு) உயிரையும் வாழ்வையும் தந்தாய்; எம்மனோரால் - எங்களைப் போன்றவர்களால்; கையுறை கோடற்கு ஒத்த காட்சியை அல்லை - காணிக்கைப் பொருள் |