பக்கம் எண் :

 நாகபாசப் படலம் 383

கொள்ளுவதற்கு  உரிய   தோற்றம்  உடையவனாயும்  இல்லை; மீட்சி
செய்திறம்  இலையால்  என்றான்
 -  (எனவே நீ செய்த உதவிக்குக்)
கைம்மாறு செய்ய வழி இல்லை என்றான்.
 

                                                 (267)
 

8269.‘பொருளினை உணர வேறு புறத்தும் ஒன்று உண்டோ,
                                        புந்தித்
தெருளினை உடையர் ஆயின்? செயல் அருங் கருணைச்
                                        செல்வ!
மருளினில் வரவே, வந்த வாழ்க்கை ஈது ஆகின், வாயால்
அருளினைஎன்னின், எய்த அரியன உளவோ?-ஐய!
 

ஐய!  - ஐயனே; செயல்  அருங் கருணைச் செல்வ - செய்தற்கு
அரிய  அருட்  செயல்  செயத் செல்வனே! மருளினின் வரவே வந்த
வாழ்க்கை  ஈது  ஆகின்
-  மயங்கி வருந்தவதற்கு இடமாக வந்ததே
இந்த  வாழ்க்கை  என்றால்; வாயால்  அருளினை  என்னின்  - (நீ)
வாயினால்  அருள்கொண்டு  வரம் தருவாய் என்றால்; எய்த அரியன
உளவோ
 -  (எங்களால்) எய்த முடியாத அரியபேறுகள் எவையேனும்
உள்ளதா? புந்தித் தெருளினை உடையர் ஆயின் - அறிவுத் தெளிவு
உடையவர்களாய்  இருந்தால்;  பொருளினை  உணர வேறு புறத்தும்
ஒன்று  உண்டோ?
 -  (நீ  செய்த  இந்த  உதவியின்)  பொருளினை
உணர்ந்து  கொள்ள  வேறு  பொருள்  புறத்தில் ஒன்றும் இல்லை. (நீ
செய்த  உதவிக்குக் கைம்மாறாகக் கொடுக்கப் புறத்தில்  எப்பொருளும்
இல்லை என்றபடி)
 

                                                (268)
 

8270.‘கண்டிலை,   முன்பு;   சொல்லக்   கேட்டிலை;   கடன்
                                    ஒன்று எம்பால்
கொண்டிலை; கொடுப்பது அல்லால், குறை இலை; இது
                                   நின் கொள்கை;
“உண்டு, இலை” என்ன நின்ற உயிர் தந்த உதவியோனே!
பண்டு இலை நண்பு; நாங்கள் செய்வது என்? பகர்தி!’
                                        என்றான்.

 

உண்டு  இலை என்ன  நின்ற  உயிர்  தந்த  உதவியோனே -
உண்டோ  இல்லையோ  என்று ஐயங்  கொள்ளும்படியாக  நின்றிருந்த
இலக்குவன் உயிரை (மீட்டும்) தந்த உதவியோனே!