பக்கம் எண் :

384யுத்த காண்டம் 

பண்டு  நண்பு  இலை  -  (உனக்கும்  எங்களுக்கும்)  முன்பு  (எந்த
விதமான)   நட்பும்  இல்லை;  முன்பு  கண்டிலை  -  முன்னால்  (நீ
எங்களைக்) கண்டதுமில்லை; சொல்லக் கேட்டிலை - (எங்களைப் பற்றி
மற்றவர்) சொல்லக் கேட்டதும் இல்லை; எம்பால் - எங்களிடம்;  கடன்
ஒன்று   கொண்டிலை
  -   கடனாக   எந்த  ஒன்றையும்  பெற்றுக்
கொண்டதும்   இல்லை;  கொடுப்பது   அல்லால்   -  எங்களுக்குச்
கொடுப்பது  அல்லாமல்; குறை இலை - இதுவே உனது  கோட்பாடாக
இருக்கிறது; நாங்கள் செய்வது  என்  பகர்தி  - நாங்கள் (உனக்குச்)
செய்யும்  கைம்மாறு  என்ன  சொல்;  என்றான்  - என்று  (இராமன்)
கேட்டான்.
 

எங்களுக்கும்   உனக்கும் இதுவரை எத்தகைய தொடர்பும் இல்லை
எனினும்  நீ  எங்களுக்குக் கைம்மாறு கருதாது உயிர் தந்து பேருதவி
புரிந்து  உள்ளாய்.  அப்படிப்பட்ட  உனக்கு  நாங்கள்  எவ்வகையில்
உதவுவது   என்று   இராமன்   கருடனைப்  பாராட்டிக்  கூறியவாறு.
கண்டிலை    -   கேட்டிலை   என்பவற்றுக்கு   எங்களால்   முன்பு
காணப்பட்டாயில்லை.  கேட்கப்பட்டாயில்லை என்று இராமன் கூற்றாக
வைத்தலே    பொருந்தும்;    கருடன்   இவர்களைக்   கண்டானா?
கேட்டுள்ளானா?  என்பதை  இவன் விசாரித்தல் பொருந்தாது என்பது
மகாவித்துவான் மயிலம். வே. சிவசுப்பிரமணின் அவர்கள் கருத்து.
 

                                                (269)
 

                          கருடன் மறுமொழி கூறி விடை பெறல்
 

8271.பறவையின் குலங்கள் காக்கும் பாவகன், ‘பழைய நின்னோடு
உறவு உள தன்மைஎல்லாம் உணர்த்துவென்; அரக்கனோடு
                                            அம்
மற வினை முடித்த பின்னர், வருவென்’ என்று உணர்த்தி,
                                          ‘மாயப்
பிறவியின் பகைஞ! நல்கு, விடை’ எனப் பெயர்ந்து
                                     போனான்.
 

பறவையின்   குலங்கள்   காக்கும்   பாவகன்   -   பறவைக்
கூட்டங்களைப் பாதுகாக்கின்ற தூயவனாகிய கருடன்; மாயப் பிறவியின்
பகைஞ
-  (இராமனைப்  பார்த்து)   மாயப்பிறப்பறுக்கும்   பிறவியின்
பகைவனே; நின்னோடு பழைய உறவு உள  தன்மை  எல்லாம்  -
உன்னோடு (எனக்குப்)  பழைய  உறவு உள்ள  தன்மைகளை எல்லாம்;
அரக்கனோடு - அரக்கனாகிய