பக்கம் எண் :

 நாகபாசப் படலம் 385

இராவணனோடு;   அம்மறவினை   முடித்த  பின்னர்   வருவென்
உணர்த்துவென்
- அந்தப் போர்த்தொழிலை (நீ) முடித்த பின்பு வந்து
உணர்த்துவேன்; என்று  உணர்த்தி  -  என்று  கூறி; நல்கு விடை -
இப்போது  நீ எனக்கு  விடை  கொடு; எனப் பெயர்ந்து போனான் -
என்று திரும்பிப் போனான்.
 

                                                (270)
 

                      இராமன் புகழ்ச்சியும் அனுமன் பேரொலியும்
 

8272.ஆரியன் அவனை நோக்கி, ‘ஆர் உயிர் உதவி, யாதும்
காரியம் இல்லான் போனான்; கருணையோர் கடமை ஈதால்;
பேர் இயலாளர், “செய்கை ஊதியம் பிடித்தும்” என்னார்;
மாரியை நோக்கிக் கைம்மாறு இயற்றுமோ, வையம்?
                                       என்றான்.
 

ஆரியன்  - இராமன்;  அவனை நோக்கி - அந்தக்  கருடனைப்
பார்த்து;  ஆர்   உயிர்   உதவி   -  (நாகக்  கணையால்  விழுந்து
இறந்தவர்களுக்கு)  அருமையான உயிரைத் தந்துதவி;  யாதும் காரியம்
இல்லாமல்   போனான்
 -   (நம்மிடத்தில்)  எந்தக்  காரியத்தையும்
(கைம்மாறாகப்)  பெறாமல் போனான்; கருணையோர் கடமை ஈதால் -
அருளுடையவர்களுடைய    செய்கை   இதுதான்   (போலும்);   பேர்
இயலாளர்
- பெருந்தன்மையுடையவர்கள்; செய்கை ஊதியம் பிடித்தும்
என்னார்
-  செய்யும் செயலுக்குப் பயன்  பெறுவோம் என்று  எண்ண
மாட்டார்கள்;   (இஃது   எவ்வாறு  எனின்)  வையம்  -  இவ்வுலகில்
வாழ்பவர்கள்; மாரியை நோக்கிக் கைம்மாறு  இயற்றுமோ  - மழை
(தங்களுக்கு)   உதவுதலை   நோக்கி   அதற்குக்  கைம்மாறு  செய்ய
வல்லமை   உடையவர்கள்   ஆள்வார்களோ?  என்றான்  -  என்று
கூறினான்.
 
 

கைம்மாறு    கருதாது நாகக்  கணையால் விழுந்து கிடந்தவர்களை
உயிர்ப்பித்துக்   காரியம்    இல்லான்   போன   கருடனது   செயல்,
உலகத்தவர்  எவ்வித்  கைம்மாறு செய்யாத இடத்தும்  அவர்களுக்குப்
பெய்து உதவும் மழையின் செயல் போன்றது என்றார்.
 

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்னாற்றுங் கொல்லோ உலகு

                                     ஒப்புரவறிதல் - 1