பக்கம் எண் :

386யுத்த காண்டம் 

என்ற     திருக்குறளின்     கருத்து     முழுவதும்    இப்பாடலில்
அமைந்துள்ளமை நோக்குக.
 

                                                (271)
 

8273.‘“இறந்தனன், இளவல்” என்னா, இறைவியும் இடுக்கண்
                                       எய்தும்;
மறந்தனர் உறங்குகின்ற வஞ்சரும் மறுகி, “மீளப்
பிறந்தனர்” என்று கொண்டு, ஓர் பெரும் பயம் பிடிப்பர்
                                         அன்றே;
அறம் தரு சிந்தை ஐய! ஆர்த்தும்’ என்று அனுமன்
                                      சென்னான்.
 

அனுமன்  - அனுமன்;  அறம் தரு  சிந்தை  ஐய - (இராமனை
நோக்கி)   அறம்   நிறைந்த  மனத்தை  உடைய  ஐயனே!  இளவல்
இறந்தனன்  என்னா
 -  நாம்  இப்பொழுது  மகிழ்ச்சிக்குரிய செயல்
செய்யவில்லை  எனில்  இளவலாகிய  இலக்குவன்  இறந்து  விட்டான்
என்று;  இறைவியும்  இடுக்கண்   எய்தும்   -  சீதையும்  துன்பம்
அடைவாள்;   மறந்தனர்   உறங்குகின்ற   வஞ்சமும்   மறுகி -
(பேராரவாரம்  செய்தால்)  (கவலையை)  மறந்து  உறங்குகின்ற  (பகை
முடித்தோம்  என்று)   வஞ்சனைப்  பண்புள்ள அரக்கர்களும்  (மனம்
கலங்கி); மீளப் பிறந்தனர் என்று கொண்டு  - மீளவும் (நாம்) உயிர்
பெற்று எழுந்து விட்டோம் என்று  எண்ணிக்  கொண்டு;  ஓர் பெரும்
பயம் பிடிப்பர் அன்றே
 - ஒப்பற்ற   மிக்க  அச்சம்  கொள்வார்கள்
அல்லவா? ஆர்த்தும் என்று -  (இச்செயல்களுக்காக நாம்) ஆரவாரம்
செய்வோம் என்று; சொன்னான் - கூறினான்.
 
 

சீதையின்     மனத்துயர் நீங்கவும், பகைவர்  பயம்  கொள்ளவும்
பேரொலி   எழுப்ப   அனுமதி  தருக  என  அனுமன்  இராமனிடம்
வேண்டினன்  என்க.  இலக்குவன்  முதலியோர்  இறந்ததை  அரக்கர்
சீதையிடம்  தெரிவித்துத்  துன்புறுத்துவர்  என  அனுமன்  கருதியே
இவ்வாறு  கூறினான்  என்க.  மாயாசனகப் படலமும், சீதைகளங்காண்
படலமும்  அனுமன்  கொண்ட எண்ணம் சரியானது தான் என்பதைக்
காட்டி நிற்றலை உணர்க.
 

                                                (272)
 

8274.‘அழகிது’    என்று   அண்ணல்   கூற,   ஆர்த்தனர்-
                                 கடல்கள் அஞ்சிக்

குழைவுற, அனந்தன் உச்சிக் குன்றின்நின்று அண்டகோளம்