ஒண்ணுதற்கோ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு |
தகையணங்குறுத்தல் - 8 |
என்ற குறளை நினைவுபடுத்தலை உணர்க. |
(274) |
8276. | தாதை சொல் தலைமேல் கொண்ட தாபதன், தரும மூர்த்தி ஈதைகள் தீர்க்கும் நாமத்து இராமனை எண்ணி ஏங்கும் சீதையும், அவளை உன்னிச் சிந்தனை தீர்ந்தும் தீராப் பேதையும், அன்றி, அவ் ஊர் யார் உளர், துயில் பெறாதார்? |
தாதை சொல் தலை மேல் கொண்ட - தந்தையாகிய (தசரதனது) சொல்லைத் தலைமேற்கொண்டு செயல் செய்த; தாபதன் - தவவேடத்தை உடையவனும்; தரும மூர்த்தி - அறந்தலை நிறுத்த வந்தவனும்; ஈதைகள் தீர்க்கும் நாமத்து இராமனை - ஓதியவர்களுடைய துன்பங்களை நீக்கும் திருப்பெயரை உடையவனும் ஆய இராமனை; எண்ணி ஏங்கும் சீதையும் - எண்ணி எண்ணி வருந்துகிற சீதையும்; அவளை உன்னி - அவளை நினைத்து; சிந்தனை தீர்ந்தும் தீராப் பேதையும் - (அவள் தன்னை விரும்பாள் எனத்) தெரிந்தும் (அவளிடத்தில் கொண்ட) மோகம் நீங்காத அறிவிலியாகிய இராவணனும்; அன்றி - ஆகிய அவர்களைத் தவிர; அவ் ஊர் - அந்த இலங்கையில்; துயில் பெறாதார் யார் உளர் - தூங்காதவர்கள் யார்? ஒருவரும் இல்லை என்றபடி. |
(275) |
8277. | சிங்கஏறு, அசனிஏறு கேட்டலும், ‘சீற்றச் சேனை பொங்கியது’ என்ன, மன்னன் பொருக்கென எழுந்து, ‘ “போரில் மங்கினர் பகைஞர்” என்ற வார்த்தையே வலியது!’ என்னா, அங்கையோடு அங்கை கொட்டி, அலங்கல் தோள் குலுங்க நக்கான். |
சிங்க ஏறு மன்னன் - ஆண் சிங்கம் போன்றவனாகிய இராவணன்; அசனி ஏறு கேட்டலும் - ஆணிடி போன்ற (வானரப் படையின்) பேரொலி கேட்ட உடனே; சீற்றச் சேனை பொங்கியது |