என்ன - சினம் மிக்க வானரப்படை போருக்கு எழுந்தது என்று எண்ணி; பொருக்கென எழுந்து - விரைவாக எழுந்து; போரில் மங்கினர் பகைஞர் என்ற - போரில் பகைவர்கள் இறந்து ஒழிந்தனர் என்று (இந்திரசித்தன் கூறிய); வார்த்தையே வலியது என்னா - சொற்கள் (மிக)வலிமை உடையனவாய் உள்ளன என்று இகழ்ந்து கூறி; அங்கையோடு அங்கை கொட்டி - உள்ளங் கையோடு உள்ளங்கையைச் சேர்த்துத் தட்டி; அலங்கல் தோள் குலுங்க நக்கான் - மாலை அணிந்த (தன்) தோள்கள் குலுங்குமாறு சிரித்தான். | (276) | 8278. | ‘இடிக்கினற் அசனி என்ன இரைக்கின்றது, இராமன் போல் வில்; வெடிக்கின்றது அண்டம் என்ன, படுவது தம்பி வில் நாண்; அடிக்கின்றது என்னை வந்து, செவிதொறும் அனுமன் ஆர்ப்பு; பிடிக்கின்றது உலகம் எங்கும், பரிதி சேய் ஆர்ப்பின் பெற்றி,* | இராமன் போர் வில் - இராமனுடைய போர் செய்தற்குரிய வில்லானது; இடிக்கின்ற அசனி உன்ன இரைக்கின்றது - இடிக்கின்ற இடி போலப் பேரொலி செய்கின்றது; தம்பி வில் நாண் - தம்பியாகிய இலக்குவனது வில் நாணொலி; அண்டம் வெடிக்கின்றது என்ன படுவது - இந்த அண்டகோளம் வெடிபடுகிறேதா என்று எண்ணும்படி ஒலிக்கின்றது; அனுமன் ஆர்ப்பு - அனுமனுடைய பேரொலி; என்னை - என்னுடைய; செவிதொறும் வந்து அடிக்கின்றது - செவிகள் தோறும் வந்து தாக்குகின்றது; பருதி சேய் ஆர்ப்பின் பெற்றி - கதிரவன் மகனாகிய சுக்கிரீவனின் பேரொலியின் தன்மை; உலகம் எங்கும் பிடிக்கின்றது - உலகம் முழுதும் பரவி ஒலிக்கின்றது. | (277) | 8279. | ‘அங்கதன் அவனும் ஆர்த்தான்; அந்தரம் ஆர்க்கின்றானும், வெங் கத நீலன்; மற்றை வீரரும், வேறு வேறு, |
|
|
|