| பொங்கினர் ஆர்த்த ஓசை அண்டத்தும் புறத்தும் போன; சங்கை ஒன்று இன்றித் தீர்ந்தார் பாசத்தை, தருமம் நல்க.* |
அவனும் அங்கதன் ஆர்த்தான் - அந்த அங்கதனும் பேரொலி செய்கின்றான்; வெங்கத நீலன் - கொடும் சினம் உடைய நீலனும்; அந்தரம் ஆர்க்கின்றானும் - விண்ணில் ஓசை எழுமாறு ஒலிக்கின்றான்; மற்றை வீரரும் - பிற வானர வீரர்களும்; வேறு வேறு - தனித்தனியாகப்; பொங்கினர் ஆர்த்த ஓசை - மன மகிழ்ச்சி கொண்டு ஒலித்த பேரொலி; அண்டத்தும் புறத்தும் போன - இந்த அண்டத்திலும் அதற்கு அப்பாலும் பரவின; தருமம் நல்க - அறம் துணை நின்றதனால்; பாசத்தை - நாகக் கணையில் இருந்து; சங்கை ஒன்று இன்றித் தீர்ந்தார் - ஐயம் எதுவும் இல்லாமல் நீங்கினார்கள்; (வானரப் படையினரும் இலக்குவனும் என்க.) |
(278) |
இராவணன் இந்திரசித்தன் மாளிகைக்கு எழுதல் |
8280. | என்பது சொல்லி, பள்ளிச் சேக்கைநின்று இழிந்து, வேந்தன், ஒன்பது கோடி வாட் கை அரக்கர் வந்து உழையின் சுற்ற, பொன் பொதி விளக்கம் கோடிப் பூங் குழை மகளிர் ஏந்த, தன் பெருங் கோயில்நின்றும் மகன் தனிக் கோயில் சார்ந்தான்.* |
வேந்தன் - அரசனாகிய இராவணன்; என்பது சொல்லி - என்பது பலவற்றைத் (தனக்குள்) சொல்லிக்கொண்டு; பள்ளிச் சேக்கை நின்று இழிந்து - படுக்கையில் இருந்து இறங்கி; வாட்கை ஒன்பது கோடி அரக்கர் - வாளைக் கையில் ஏந்திய ஒன்பது கோடி அரக்க வீரர்கள்; வந்து உழையின் சுற்ற - திரண்டு வந்து பக்கங்களில் சூழ்ந்து உடன் வரவும்; பூங்குழை மகளிர் கோடி - அழகிய காதணியை அணிந்த மகளிர் கோடியளவினர்; பொன் பொதி விளக்கம் ஏந்த - பொன்னால் செய்யப்பட்ட விளக்குகளை ஏந்தி உடன் வரவும்; தன் பெருங்கோயில் நின்றும் - தன் பெரிய அரண்மனையில் இருந்து; மகன் தனிக்கோயில் சார்ந்தான் - |