மகனாகிய இந்திரசித்தனது சிறப்புடைய அரண்மனைக்குச் (சென்று) சேர்ந்தான். | (279) | 8281. | தாங்கிய துகிலார், மெள்ளச் சரிந்து வீழ் குழலார் தாங்கி வீங்கிய உயிர்ப்பார், விண்ணை விழுங்கிய முலையார், மெல்லத் தூங்கிய விழியார், தள்ளித் துளங்கிய நடையார்,-வல்லி வாங்கிய மருங்குல் மாதர்,-அனந்தரால் மயங்கி வந்தார். | வல்லி வாங்கிய மருங்குல் மாதர் - பூங்கொடியையும் பின்னிடச் செய்த இடையினை உடைய பெண்கள்; தாங்கிய துகிலார் - (கையில் தூக்கித்) தாங்கிய சேலையை உடையவராயும்; மெள்ளச் சரிந்து வீழ் குழலார் - (கூட்டி முடிக்கப் பெறாமையால்) மெல்லச் சோர்ந்து தொங்குகிற கூந்தலை உடையவராயும்; தாங்கி வீங்கிய உயிர்ப்பார் - தடைப்பட்டுப் பின்பு மிகுதியாக வெளிப்படுகிற பெருமூச்சினை உடையவராயும்; விண்ணை விழுங்கிய முலையார் - ஆகாயத்தை இடமின்றி விழுங்கிய (பருத்த) மார்பகங்களை உடையவராயும்; மெல்லத் தூங்கிய விழியார் - அரை குறையாகத் தூங்கிய கண்களை உடையவராயும்; தள்ளித் துளங்கிய நடையார் - தடுமாறி நடுங்கும் நடையினை உடையவராயும்; அனந்தரால் மயங்கி வந்தார் - தூக்க மயக்கத்தால் மயங்கி (இராவணனோடு) வந்தார்கள். | (280) | 8282. | பானமும், துயிலும், கண்ட கனவும், பண் கனிந்த பாடல் கானமும், தள்ளத் தள்ள, களியொடும் கள்ளம் கற்ற, மீனினும் பெரிய, வாட் கண் விழிப்பது முகிழ்ப்பது ஆக, வானவர் மகளிர் போனார், மழலை அம் சதங்கை மாழ்க* | வானவர் மகளிர் - தேவமாதர்கள்; பானமும் - மதுபானமும்; துயிலும் - தூக்கமும்; கண்ட கனவும் - (தாங்கள் கண்ட) கனவுகளும்; பண் கனிந்த பாடல் கானமும் - (இராவணனைப் |
|
|
|