பக்கம் எண் :

392யுத்த காண்டம் 

புகழ்ந்து   பாடப்பட்ட)  இசைகனிந்த  இனிய  பாடல்களும்;  தள்ளத்
தள்ள
 -  (தம்மைச்)  சூழ்ந்து  சுற்றித்தள்ளத்  தள்ள;   களியொடும்
கள்ளம்   கற்ற   மீனினும்
 -  மதச்  செருக்குடன்  வஞ்சனையைக்
கற்றுள்ள   மீனைக்காட்டிலும்;  பெரிய  வாட்கண்  -  பெரிய  ஒளி
பொருந்திய   (தங்கள்)   கண்கள்;  விழிப்பது  முகிழ்ப்பது  ஆக -
திறப்பதும்  மூடுவதுமாக  (இருக்க); அம்  சதங்கை மழலை மாழ்க -
அழகிய     சதங்கைகள்   மென்மையாக    ஒலிக்கப்;  போனார்  -
(இராவணனுடன்) சென்றார்கள்.
 
 

                                                (281)
 

8283.மழையினை நீலம் ஊட்டி, வாசமும் புகையும் ஆட்டி,
உழை உழை சுருட்டி, மென் பூக் குவித்து, இடைக்கு
                                 இடையூறு என்னா,
பிழையுடை விதியார் செய்த பெருங் குழல்,
                           கருங் கண், செவ் வாய்,
இழை அணி, மகளிர் சூழ்ந்தார், அனந்தரால்,
                                  இடங்கள்தோறும்.
 

மழையினை   நீலம் ஊட்டி - மேகத்திற்கு  நீல  நிறத்தை ஏற்றி;
வாசமும்  புகையும்    ஆட்டி  -  (அதற்கு) மணத்தையும்  (அகில்)
புகையையும்  ஊட்டிச்; சுருட்டி - சுருளச் செய்து;   உழை உழைமென்
பூக்குவித்து
 -    இடை   இடையே   மென்னைமயான  மலர்களைச்
சேர்த்துச்    சொருகி; இடைக்கு  இடையூறு என்னா - நூலிடைக்குத்
துன்பம் உண்டாகும் என்று கருதாமல்; பிழையுடை விதியார் செய்த -
பிழையை   உடைய   விதி  உண்டாக்கிய;  பெருங்குழல்  -  நீண்ட
கூந்தலையும்;   கருங்கண் -  கருமையான கண்களையும்; செவ்வாய் -
சிவந்த    வாயினையும்    உடைய;  இழை   அணி   மகளிர்   -
அணிகலன்களை    அணிந்த   பெண்கள்;  அனந்தரால்  -  தூக்கக்
கலக்கத்தோடு; இடங்கள் தோறும் சூழ்ந்தார் - பக்கங்களில் எல்லாம்
(இராவணனைச்) சூழ்ந்தார்கள்.
 

                                                (282)
 

8284.தேனிடை, கரும்பில், பாலில் அமுதினில், கிளவி தேடி,
மானிடை, கயலில், வாளில், மலரிடை, நயனம் வாங்கி,