பக்கம் எண் :

 நாகபாசப் படலம் 393

மேல் நடை அனைய மற்றும் நல் வழி நல்க வேண்டி,
வானுடை அண்ணல் செய்த மங்கையர் மருங்கு சென்றார்.

 

வானுடை  அண்ணல் - சத்தியலோகத்தைத்  தனக்கு  உரிமையாக
உடைய  பிரமதேவன்; தேனிடை  -  தேன்  இடத்திலும்; கரும்பில் -
கரும்பின்  இடத்திலும்;  பாலில் - பாலின்  இடத்திலும்; அமுதினில் -
தேவர்களின்  அமுதத்தின் இடத்திலும்;  கிளவி தேடி - (உள்ள இனிய
பகுதிகளைப்)  பேச்சினை  (உருவாக்கத்) தேடி  அமைத்து; மானிடை -
மானின்  இடத்திலும்;  கயலில்  -  கயல்   மீனிடத்திலும்;  வாளில் -
வாளின்  இடத்திலும்;  மலரிடை  -  மலர்களின்  இடத்திலும்; நயனம்
வாங்கி
 -  (உள்ள  சிறப்புப்  பகுதிகளைச்  சேர்த்துக்)   கண்களாகச்
சமைத்து;  மற்றும்  அனைய  மேல் நடை - மற்றும் அவை போன்ற
சிறப்புடையவைகளான; நல்வழி  நல்கவேண்டி  - நல்ல  வகைகளைக்
கொண்டு  படைக்க  விரும்பி;  செய்த மங்கையர் - படைத்த மகளிர்;
மருங்கு சென்றார் - (இராவணன் உடைய) பக்கங்களில் சென்றார்கள்.
 
 

                                                (283)
 

8285.தொடங்கிய ஆர்ப்பின் ஓசை செவிப்புலம் தொடர்தலோடும்,
இடங்கரின் வயப் போத்து அன்ன எறுழ் வலி அரக்கர்
                                         யாரும்,
மடங்கலின் முழக்கம் கேட்ட வான் கரி ஒத்தார்; மாதர்
அடங்கலும், அசனி கேட்ட அளை உறை அரவம் ஒத்தார்.
 

தொடங்கிய   -  (வானரப்   படையினர்)  தொடங்கிச்   (செய்த);
ஆர்ப்பின்  ஓசை  - பேரொலி; செவிப்புலம்  தொடர்தலோடும் -
காதுகளாகிய  புலத்தில்  நுழைந்த உடனே; இடங்கரின் வயப் போத்து
அன்ன
 -  வலிய ஆண் முதலையை ஒத்துள்ள; எறுழ் வலி அரக்கர்
யாரும்
- மிக்க வலிமை உடைய அரக்கர்கள் எல்லோரும்; மடங்கலின்
முழக்கம்  கேட்ட
 -  சிங்கத்தின்  முழக்கத்தைக்  கேட்ட; வான் கரி
ஒத்தார்
  -  பெரிய  யானைகளை  ஒத்து   விளங்கினார்கள்;  மாதர்
அடங்கலும்
 - அரக்கப் பெண்டிர் எல்லோரும்; அசனி கேட்ட - இடி
முழக்கம்   கேட்ட;  அளை   உறை   அரவம்  -  புற்றில்  வாழும்
பாம்புகளை; ஒத்தார் - ஒத்தார்கள்.
 
 

                                                (284)