பக்கம் எண் :

 நாகபாசப் படலம் 395

இந்திரசித்தன்   பார்த்து; துணுக்குற்ற மனத்தன் - நடுக்கம்  கொண்ட
மனத்தை  உடையவனாய்;  தோன்றல்  - தோன்றலே; அழுங்கினை -
(நீ)  மிக  வருத்தம்  கொண்டு  உள்ளாய்;  அடுத்தது - அண்மையில்;
என்னை  வந்தது  -  உனக்கு என்ன தீங்கு வந்தது; என்று எடுத்துக்
கேட்டான்
- என்று பல தடவை கேட்டான்; புழுங்கிய புண்ணினானும்
-  துன்பம்    உற்று    வருந்துவதற்குக்   காரணமாகிய    புண்களை
உடையனாகிய இந்திரசித்தனும்; இனையன புகலலுற்றான் -  இத்தகைய
சொற்களைச் சொல்லத் தொடங்கினான்.
 
 

                                                (286)
 

                                     இந்திரசித்தன் மறுமொழி
 

8288.‘உருவின உரத்தை முற்றும் உலப்பு இல உதிரம் வற்றப்
பருகின அளப்பிலாத பகழிகள்; கவசம் பற்று அற்று
அருகின; பின்னை, சால அலசினென்; ஐய! கண்கள்
செருகின அன்றே, யானும் மாயையின் தீர்ந்திலேனேல்?
 

ஐய!  - ஐயனே; அளப்பில்லாத பகழிகள் - (இலக்குவன் என் மீது
தொடுத்த)  மிகப்பலவாகிய  அம்புகள்;  உரத்தை முற்றும் உருவின -
என்  மார்பு  முழுவதும்  பாய்ந்து  ஊடுருவின்;  உலப்பு இல உதிரம்
வற்றப் பருகின
- குறைந்து அழிதல் இல்லாத (என்  உடம்பில் உள்ள)
குருதியை  வற்றிப்  போகுமாறு  பருகி விட்டன; கவசம் பற்று அற்று
அருகின
 -  (என்  மார்புக்)  கவசங்கள்  நெக்கு விட்டுப்  பிளந்தன;
பின்னை  சால  அலசினென்  -  பின்பு மிகவும் தளர்ந்து போனேன்;
கண்கள்   செருகின  அன்றே  -  (என்)  கண்கள்  சொருகிவிட்டன
அல்லவா?   யானும்   -   நானும்; மாயையின்  தீர்ந்திலேனேல்  -
மாயையினால்  மறையாமல்  இருந்து  இருப்பேன்  என்றால்;  (இறந்தே
போய் இருப்பேன் என்றவாறு)
 

                                                (287)
 

8289.இந்திரன், விடையின் பாகன், எறுழ் வலிக் கலுழன் ஏறும்
சுந்தரன், அருக்கன் என்று இத் தொடக்கத்தார் தொடர்ந்த
                                         போரில்,