| நொந்திலென்; இனையதுஒன்றும் நுவன்றிலென்; மனிதன் நோன்மை, மந்தரம் அனைய தோளாய்! வரம்பு உடைத்து அன்று மன்னோ. |
மந்தரம் அனைய தோளாய் - மந்தரப் பெருங்கிரியை ஒத்த தோள்களை உடையவனே; இந்திரன் - தேவர் தலைவன் ஆகிய இந்திரனும்; விடையின் பாகன் - வெள்ளேற்றை வாகனமாகக் கொண்ட சிவபிரானும்; எறுழ் வலிக்கருடன் ஏறும் சுந்தரன் - மிக்க வலிமை உடைய கருடனை ஊர்தியாகக் கொண்ட அழகிய திருமாலும்; அருக்கன் - கதிரவனும்; என்று - என்று கூறும்; இத்தொடக்கத்தார் - இத்தன்மை உடையவர்கள்; தொடர்ந்த போரில் - (என்மீது) தொடங்கிய போரினால்; நொந்திலென் - (நான் சிறிது கூட) வருத்தம் அடையவில்லை; இனையது ஒன்று நுவன்றிலேன் - இத்தகைய சொற்கள் ஒன்றையும் (நான்) சொல்லியதும் இல்லை; மனிதன் நோன்மை - மனிதனாகிய இலக்குவனுடைய வலிமை; வரம்பு உடைத்து அன்று - ஓர் எல்லைக்கு உட்பட்டது அன்று. |
மன் ஓ - அசைகள். |
(288) |
8290. | ‘இளைவன் தன்மை ஈதால்; இராமனது ஆற்றல் எண்ணின், தளை அவிழ் அலங்கல் மார்ப! நம்வயின் தங்கிற்று அன்றால் விளைவு கண்டு உணர்தல் அல்லால், வென்றி மேல் விளையும் என்ன உளை;அது அன்று’ என்னச் சொன்னான், உற்றுளது உணர்ந்திலாதான். |
தளை அவிழ் அலங்கல் மார்ப - கட்டு அவிழ்ந்த மலர்களால் ஆகிய மாலை அணிந்த மார்பினை உடையவனே!; இளையவன் தன்மை ஈதால் - இளையவனாகிய இலக்குவன் (வலிமையின்) தன்மை இதுவாகும்; இராமனது ஆற்றல் எண்ணின் - இராமனது வலிமையைப் பற்றி எண்ணிப் பார்த்தால்; நம் வயின் தங்கிற்று அன்றால் - நம் இடத்தில் (எண்ணிப் பார்க்கும்படி) பொருந்தியது ஆகாது; விளைவு கண்டு உணர்தல் அல்லால் - இனிமேல் எங்ஙனம் |