இராவணன் உரை | 8292. | ‘வார் கழல் கால! மற்று அவ் இலக்குவன் வயிர வில்லின் பேர் ஒலி அரவம் விண்ணைப் பிளந்திட, குரங்கு பேர்ந்த, கார் ஒலி மடங்க, வேலை கம்பிக்க, களத்தின் ஆர்த்த போர் ஒலி ஒன்றும், ஐய! அறிந்திலை போலும்! என்றான். | ஐய! - ஐயனே; வார்கழல் கால! - நீண்ட கழல் அணிந்த காலை உடைய (இந்திரசித்தனே); மற்று அவ் இலக்குவன் வயிர வில்லின் பேர் ஒலி அரவம் - அந்த இலக்குவனுடைய வலிமையான வில்லினது மிகப்பெரிய ஒலி; விண்ணைப் பிளந்திட - ஆகாயத்தைப் பிளக்க; குரங்கு பேர்த்த - குரங்குகளில் இருந்து எழுந்த பேரொலி; கார் ஒலி மடங்க - மேகங்களின் இடியொலி கூடக் கீ்ழ்ப்படும்படி ஒலிக்க; வேலை கம்பிக்க - கடல்கள் நடுங்கி நிற்க; களத்தின் ஆர்த்த - போர்க்களத்தில் (இருந்து) ஆரவாரம் செய்த; பேர் ஒலி - மிகப்பெரிய ஓசையை; அறிந்திலை போலும் என்றான் - (நீ) அறியவில்லை போலும் என்று (இராவணன்) கேட்டான். | (291) | இந்திரசித்தன் வினா | 8293. | ‘ஐய! வெம் பாசம்தன்னால் ஆர்ப்புண்டார்; அசனி என்னப் பெய்யும் வெஞ் சரத்தால் மேனி பிளப்புண்டார்; உணர்வு பேர்ந்தார்; “உய்யுநர்” என்ற உரைத்தது உண்மையோ? ஒழிக்க ஒன்றோ? “செய்யும்” என்று எண்ண, தெய்வம் சிறிது அன்றோ தெரியின் அம்மா,’ | ஐய! - ஐயனே; வெம்பாசம் தன்னால் ஆர்ப்புண்டார் - (இலக்குவனும் வானரப்படை வீரர்களும்) கொடிய நாகக்கணையினால் கட்டுப்பட்டார்கள்; அசனி என்னப் பெய்யும் வெஞ்சரத்தால் - (அதற்கு மேல்) இடியைப் போல் சொரிந்த |
|
|
|