(என்னுடைய) கொடிய அம்புகளால்; மேனி பிளப்புண்டார் - உடல்கள் பிளக்கப்பட்டார்கள்; உணர்வு பேர்ந்தார் - உணர்வு கெட்டார்கள்; உய்யுநர் என்று உரைத்தது உண்மையோ? - (அத்தகைய நிலை அடைந்தவர்கள்) பிழைத்து உள்ளார்கள் (என்று நீ கூறுவது) உண்மைதானா?; ஒழிக்க ஒன்றோ - (அவர்களை நான் கட்டிய நாகக்கணை) ஒழித்து நீக்குவதற்கு உரிய ஒன்றா?; செய்யும் என்று எண்ண - (வேறு ஒன்று அக்கணையை வலி இழக்கச்) செய்யும் என்று; தெரியின் - எண்ணிப் பார்த்தால்; தெய்வம் சிறிது அன்றோ அம்மா - இக்கணையை எனக்குக் கொடுத்த தெய்வம் சிறுமை அடைந்து விடுமல்லவா? | (292) | களத்தில் நிகழ்ந்ததைத் தூதுவர் கூறல் | 8294. | இது உரை நிகழும் வேலை, எய்தியது அறியப் போன தூதுவர், விரைவின் வந்தார், புகுந்து, அடி தொழுதலோடும், ‘யாது அவண் நிகழ்ந்தது?’ என்ன இராவணன் இயம்ப, ஈறு இன்று, ஓதிய கல்வியாளர் புகுந்துளது உரைக்கலுற்றார்: | ஈது உரை நிகழும் வேலை - இவ்வாறு (இராவணனுக்கும் இந்திரசித்தனுக்கும் இடையே) உரையாடல் நடந்து வந்த நேரத்தில்; எய்தியது அறியப்போன தூதுவர் - நடந்த நிகழ்ச்சிகளை அறிந்து வரப்போன தூதுவர்கள்; விரைவின் வந்தார் - (போர்க்களத்தில் இருந்து) விரைவாக (இராவணன் இருக்கும் இடம்) வந்து; புகுந்து - சேர்ந்து; அடி தொழுதலோடும் - இராவணனுடைய அடிகளில் விழுந்து வணங்கிய உடனே; அவண் நிகழ்ந்தது யாது என்ன இயம்ப - போர்க்களத்தில் நடந்தது என்ன. என்று (இராவணன்) கேட்க; ஈறு இன்றி ஓதிய கல்வியாளர் - எல்லை இல்லாது படித்துத் தேர்ந்த கல்வி அறிவுடைய தூதர்கள்; புகுந்துளது - (அங்கு) நடந்த நிகழ்ச்சிகளை; உரைக்கலுற்றார் - சொல்லத் தொடங்கினார்கள். | (293) | 8295. | ‘பாசத்தால் பிணிப்புண்டாரை, பகழியால் களப்பட்டாரை, தேசத்தார் அரசன் மைந்தன் இடை இருள் சேர்ந்து நின்றே, |
|
|
|