பக்கம் எண் :

4யுத்த காண்டம் 

மகிழ்ச்சியோடு    இருப்பிடத்தில்  இருந்து  எழுந்து  அவனை மார்பு
இறுகத்  தழுவி;  அன்பு  - என் அன்புக்கு உரியவனே; அனையவன்
தன்னைக் கொண்டு ஆங்கு அணுகுதி என்னா
- அந்த மருத்தனை
மாயாசனக  உருவத்துடன் கொண்டு அசோக வனத்துக்கு  வருக என்று
சொல்லிவிட்டு; வினைகளைக் கற்பின் வென்ற விளக்கினை வெருவல்
காண்பான்
 -  தீய  வினைகளைத்  தன்  கற்பின்  திண்மையால் ஒரு
பொருட்டாக  எண்ணாது  வென்ற  பெண்  குல  விளக்காம் சீதையை
அச்சுறுத்தும் பொருட்டு; புனை மலர்ச் சரளச் சோலை நோக்கினான்
-  அழகிய  மலர்களைக்  கொண்ட இனிய அசோக வனத்தை நோக்கி;
எழுந்து போனான் -
 

சரளம்    -    இனிமை;   சரசம்  - வடசொல்;   அனையவன்   -
வினையாலணையும் பெயர்; விளக்கு - உவம ஆகுபெயர்.
 

                                                 (4)
 

7636.

மின் ஒளிர் மகுட கோடி வெயில் ஒளி விரித்து வீச,
துன் இருள் இரிந்து தோற்ப, சுடர் மணித் தோளில்
                                    தோன்றும்
பொன்னரி மாலை நீல வரையில் வீழ் அருவி பொற்ப
நல் நெடுங் களி மால் யானை நாணுற, நடந்து வந்தான்.

 

மின்     ஒளிர் மகுட கோடி - ஒளி விளங்குகின்ற மகுட வரிசை;
வெயில்  ஒளி விரித்து  வீச - இளவெயில் போன்ற ஒளியை எங்கும்
பரப்பி  வீசுதலால்;  துன் இருள் இரிந்து தோற்ப - நெருங்கிய இருள்
தோற்று நிலை கெட்டு  ஓட;  சுடர்  மணித்  தோளில் தோன்றும் -
ஒளியுடைய  மணிகளை  அணிந்த  தோளில்  விளங்கும்;  பொன்னரி
மாலை
 -  பொன்னாலாகிய அரிமாலை;  நீல வரையின் வீழ் அருவி
பொற்ப
 -  நீலமலையில்  இருந்து விழுகின்ற அருவி  போல் அழகுற
விளங்க;  நல்  நெடுங்களி  மால் யானை - நல்லிணக்கம் பொருந்திய
நெடிதுயர்ந்த   மதம்  மிக்க  யானை;  நாணுற  நடந்து  வந்தான் -
நாணமடையும் படி நடந்து வந்தான்.
 

கோடி - வரிசை; துன்னிருள் - நெருங்கிய இருள்.
 

                                                  (5)
 

7637.

‘விளக்கு ஒரு விளக்கம் தாங்கி, மின் அணி அரவின் சுற்றி,
இளைப்புறும் மருங்குல் நோவ, முலை சுமந்து இயங்கும்’
                                           என்ன