பக்கம் எண் :

400யுத்த காண்டம் 

ஏசத் தான் இரங்கி, ஏங்கி, “உலகு எலாம் எரிப்பென்”
                                     என்றான்;-
வாசத் தார் மாலை மார்ப!-வான் உறை கலுழன் வந்தான்;

 

வாசத்தார்  மாலை மார்ப! - மணம்  மிக்க  மாலையை  அணிந்த
மார்பினை   உடையவனே!  பாசத்தால்  பிணிப்புண்டாரை  -  நாகக்
கணையால்  கட்டுண்டு;  பகழியால்  களப்பட்டாரை - அம்புகளினால்
போர்க்களத்தில் மயங்கிப்பட்டவர்களை; தேசத்தார்  அரசன் மைந்தன்
-  கோசலநாட்டுப்  பேரரசனாகிய  தசரதனது   மகனாகிய   (இராமன்);
இடை இருள் சேர்ந்து நின்று - நள்ளிரவில் சேர்ந்து இருந்து; இரங்கி
ஏங்கி  ஏசத்தான்
 -  முதலில்  பரிதவித்து  அழுது ஏசிப்பேசி; உலகு
எலாம்  எரிப்பென்  என்றான்
-  பின்பு  சினம்  கொண்டு  (எல்லா)
உலகங்களையும்  எரித்து  விடுவேன்  என்றான்;  வான் உறை கலுழன்
வந்தான்
 - அந்த நேரத்தில் ஆகாயத்தில்  வாழுகிற கருடன்  (அங்கு)
வந்தான்.
 

                                                (294)
 

8296.‘அன்னவன் வரவு காணா, அயில் எயிற்று அரவம் எல்லாம்
 சின்னபின்னங்கள் ஆன; புண்ணொடும் மயர்வு தீர்ந்தார்;
 முன்னையின் வலியர் ஆகி, மொய்க் களம் நெருங்கி,
                                      மொய்த்தார்;
 இன்னது  நிகழ்ந்தது’  என்றார். அரக்கன் ஈது எடுத்துச்
                                      சொன்னான்;
 

அன்னவன்  வரவு காணா - அந்தக் கருடனது  வரவைக் கண்டு;
அயில் எயிற்று அரவம்  எல்லாம் - கூர்மையான பற்களை உடைய
பாம்புக்கணைகள்  எல்லாம்;  சின்ன  பின்னங்கள்  ஆன  -  சிறிய
துண்டுகளாய்ச்  சிதறிப்போயின; புண்ணொடும்  மயர்வு  தீர்ந்தார் -
(அதனால்  நாகக்கணையால்  கட்டப்பட்டிருந்த   இலக்குவனும் வானர
வீரர்களும்)  தங்களுடைய  புண்களும்  தளர்ச்சியும்  நீங்கப்   பெற்று;
முன்னையின்  வலியர் ஆகி - முன்பை விட வலிமை மிக்கவர்களாகி;
மொய்க்களம் நெருங்கி மொய்த்தார்  -  போர்க்களத்தை நெருங்கிச்
சூழ்ந்தார்கள்; இன்னது நிகழ்ந்தது