பக்கம் எண் :

 நாகபாசப் படலம் 401

என்றார்  -   இத்தகு  செயல்  (அங்கு)  நடந்தது என்று (தூதுவர்கள்)
கூறினார்கள்;  அரக்கன்   ஈது  எடுத்துச் சொன்னான்  -  அதற்கு
அரக்கனாகிய     இராவணன்    இவற்றை    எடுத்துச்    சொல்லத்
தொடங்கினான்.
 
 

                                                 (295)
 

                                            இராவணன் கூற்று
 

8297.“ஏத்த அருந் தடந் தோள் ஆற்றல் என் மகன் எய்த பாசம்
காற்றிடைக் கழித்துத் தீர்த்தான், கலுழனாம்; காண்மின்,
                                       காண்மின்!
வார்த்தை ஈதுஆயின், நன்றால், இராவணன் வாழ்ந்த
                                       வாழ்க்கை!
மூத்தது, கொள்கை போலாம்! என்னுடை முயற்சி எல்லாம்?
 

ஏத்த  அருந்தடந்தோள் ஆற்றல் - புகழ்ச்சிக்கு அடங்காத பரந்த
தோள்   ஆற்றல்    உடைய;  என்   மகன்  -  எனக்கு  மகனாகிய
(இந்திரசித்தன்);  எய்தபாசம்   -   செலுத்திய   நாகக்   கணையைக்;
கலுழனாம் காற்றிடைக் கழித்துத் தீர்த்தான் - கருடனென்பவன் (தன்
சிறகுக்)  காற்றினால் நீக்கி அழித்து விட்டானாம்; காண்மின் காண்மின்
-  (இந்த  அதிசயத்தைக்)  காணுங்கள்  காணுங்கள்;  வார்த்தை  ஈது
ஆயின்
-  இந்த  சொல்  இவ்வாறு  ஆயின்;  இராவணன் வாழ்ந்த
வாழ்க்கை நன்றால்
- இராவணன் (இதுவரை) வாழ்ந்த (வீர) வாழ்க்கை
அழகிதாய்  இருக்கிறது; என்னுடை முயற்சி எல்லாம் - (பகைவர்களை
வென்று  அழிக்க  இதுவரை);  நான்  செய்த  என்னுடைய  முயற்சிகள்
முழுவதும்; கொள்கை மூத்தது போலாம் - கருத்து வகையால் முதுமை
அடைந்து விட்டது போலும்.
 
 

                                                 (296)
 

8298.‘உண்டு உலகு ஏழும் ஏழும் உமிழ்ந்தவன் என்னும் ஊற்றம்
கொண்டவன், என்னோடு ஏற்ற செருவினில், மறுக்கம்
                                     கொண்டான்;