பக்கம் எண் :

402யுத்த காண்டம் 

மண்டலம் திரிந்த போதும், மறி கடல் மறைந்த போதும்,
கண்டிலன்போலும், சொற்ற கலுழன், அன்று, என்னைக்
                                        கண்ணால்?

ஏழும்  ஏழும்  உலகு  உண்டு   உமிழ்ந்தவன்  -  பதினான்கு
உலகங்களையும்   (அழிவுக்காலத்துத்)   தன்னுள்  அடக்கி  (படைப்புக்
காலத்தில்)  வெளிப்படுத்தியவன்; என்னும்  ஊற்றம் கொண்டவன் -
என்னும்  வலிமைச்  சிறப்புக்  கொண்டவனாகிய திருமால்; என்னோடு
ஏற்ற  செருவினில்
- (முன்பு) என்னுடன் எதிரிட்ட போரில்; மறுக்கம்
கொண்டான்
 -  மனக்கலக்கம் கொண்டவனாய்;  மண்டலம்  திரிந்த
போதும்
 -  (தோல்வி  அடைந்து)  சுற்றித் திரிந்த போதும்; மறிகடல்
மறைந்த  போதும்
 -  (அலைகள்)  மடங்கி  மேல் எழுகிற கடலினுள்
சென்று  மறைந்த    காலத்திலும்; சொற்ற  கலுழன் - (அத்திருமாலின்
ஊர்தி  என்று சொல்லப்படுகிற கருடன்); அன்று என்னைக் கண்ணால்
கண்டிலன்  போலும்
-  அன்று  என்னைக் கணணால் காணவில்லை
போலும்.

                                                (297)

8299.‘கரங்களில் நேமி சங்கம் தாங்கிய கரியோன் காக்கும்
புரங்களும் அழியப் போன பொழுதில், என் சிலையின்
                                       பொங்கி,
உரங்களில், முதுகில், தோளில் உறையுறு சிறையில், உற்ற
சரங்களும் நிற்கவேகொல், வந்தது, அவ் அருணன் தம்பி?

கரங்களில் - தன் திருக்கைகளில்;  நேமி - (தீயவர்களை அழிக்கும்
சுதர்சனம்    என்னும்)     சக்கரப்     படையினையும்;  சங்கம்   -
(பகைவரைத்தன்  பேரொலியால் குலையச் செய்யும்;  பாஞ்ச  சன்னியம்
என்ற)  சங்கினையும்   தாங்கிய  கரியோன்  -  தாங்கிய  கருநிறம்
உடையவனாகிய   திருமால்;   காக்கும்  புரங்களும்  -  பாதுகாத்துக்
கொண்டிருக்கின்ற    (வானுலகில்    உள்ள    அமராவதி   முதலிய)
நகரங்களும்; அழியப்  போன பொழுதில் - அழிந்து சிந்தும் படியாக
(நான் அங்கு போருக்குச்) சென்ற காலத்தில்; என் சிலையின் பொங்கி
-  எனது வில்லில் இருந்து மிகுதியாக வெளிப்பட்டு (வந்த அம்புகள்);
உரங்களில் - (தன்னுடைய)