மார்பிலும்; முதுகில் - முதுகிலும்; தோளில் - தோளிலும்; உறை உறுசிறையில் - போர்வையாகப் பொருந்திய இறகுகளிலும்; உற்ற சரங்களும் நிற்கவே கொல் - தைத்த அம்புகளும் இன்னும் நிலைத்துத் தைத்திருக்கும் நிலையில் கூடவா?; அவ் அருணன் தம்பி வந்தது - அந்த அருணனுடைய தம்பியாகிய கருடன் (பகைவருக்கு உதவ) வந்தது. |
சிலை - வில், உரம் - மார்பு, உறையுறு சிறை - மேற்போர்வையாக இறகுகளை உடைய சிறகு. அருணன் காசியப முனிவர்க்கு வினதையிடம் பிறந்தவன். அவனுடைய இடுப்புக்குக் கீழ் உடல் உறுப்புகள் இல்லாதவன். சூரியன் சாரதி. இங்குக் கருடனை ‘அருணன் தம்பி’ எனக் குறிப்பிட்டது இகழ்ச்சி பற்றி. |
(298) |
இராவணன் இந்திரசித்தனைப் போரிடக் கூறல் |
8300. | ‘ஈண்டு அது கிடக்க; மேன்மேல் இயைந்தவாறு இயைக! எஞ்சி மீண்டவர்தம்மைக் கொல்லும் வேட்கையே வேட்கும் அன்றே; ஆண்தகை! நீயே இன்னும் ஆற்றுதி, அருமைப் போர்கள்; காண்டலும், நாணும்’ என்றான்; மைந்தனும் கருத்தைச் சொன்னான்; |
ஈண்டு அது கிடக்க - இப்பொழுது அது கிடக்கட்டும்; மேன் மேல் இயைந்தவாறு இயைக - இனிமேல் நடப்பது நடக்கட்டும்; எஞ்சி மீண்டவர் - (இப்போது) (நாகக் கணைக்குத்) தப்பி (உயிர்) பிழைத்தவர்கள்; தம்மைக் கொல்லும் - தம்மைக் கொல்லுகிற; வேட்கையே வேட்கும் அன்றே - விருப்பத்தையே விரும்புவோம் அல்லவா? ஆண்தகை - (அதனால்) ஆண்மைப் பண்புகள் நிறைந்தவனே; அருமைப் போர்கள் - அருமையான போர்களை; இன்னும் நீயே ஆற்றுதி - மேலும் நீயே சென்று செய்க; காண்டலும் நாணும் என்றான் - (அவ்வாறு போர் செய்து நீ அவர்களை அழிப்பதைக்) கண்டபொழுது (அவர்கள் தப்பிப் பிழைக்க உதவிய கருடன்) நாணங்கொள்ளுவான் என்று (இராவணன்) கூறினான். மைந்தனும் - அதற்கு மகனாகிய (இந்திரசித்தனும்); கருத்தைச் சொன்னான் - (தன்) மனக் கருத்தை (இராவணனிடம்) சொன்னான். |
(299) |