பக்கம் எண் :

 படைத் தலைவர் வதைப் படலம் 405

19. படைத் தலைவர் வதைப் படலம்
 

புகைநிறக்     கண்ணன்,  மாபக்கன்,  மாலி,  பிசாசன்,  சூரியன்,
பகைஞன்,  வேள்வியின்  பகைவன்,  வச்சிரத்து  எயிற்றவன் ஆகிய
அரக்கப்     படைத்லைவர்கள்     வானரப்படை     வீரர்களாலும்
இலக்குவனாலும் வதைத்து அழிக்கப்பட்டதைக் கூறுவதால் இப்படலம்
படைத்தலைவர் வதைப்படலம் என்று பெயர் பெற்றது.
 

இந்திரசித்தன்  கூறியதைக் கேட்ட இராவணன் தன் கோயில் சென்று
சேருகிறான்.    அந்நிலையில்    அரக்கப்படை   வீரர்கள்   வானரப்
படையினரின்     ஆர்ப்பினையும்,      இலக்குவனின்     வில்நாண்
ஒலியினையும் கேட்டுப் போருக்குச் செல்ல விடை வேண்டுகின்றனர்.
 

அப்போது     புகைநிறக்  கண்ணனும்  மாபக்கனும்  தங்களைப்
போருக்கு   அனுப்பவேண்டுகின்றனர்.   அதைக்  கேட்ட  தூதர்கள்
இவர்கள்  இருவரும் போர்க்களத்தில் இந்திரசித்னைத் தனியே விட்டு
விட்டு  உயிருக்கு  அஞ்சி ஓடியதைக் குறிப்பிட்டனர். அதைக் கேட்ட
இராவணன்  சினம்  மிகக்  கொண்டு அவர்களைப் பற்றி மூக்கறுத்தப்
பறை  கொட்டி  அவர்களது  செயலை ஊரில் உள்ள அனைவருக்கும்
தெரிவிக்குமாறு கட்டளை இட்டான். உடனே மாலி என்பவன் பலவகை
நியாயங்களைக்    கூறி   அச்செயல்   தகாது   என்று   கூறினான்.
அவ்விருவரும்  தங்களது நிலையை இராவணனுக்கு எடுத்துச் கூறினர்.
சினம்  தணிந்த  இராவணன்  அவர்களுடன்  பெரும்  படையையும்
படைத்தலைவர்களையும்   அனுப்பினான்.  போர்க்களத்தில்  பெரும்
போர்  நடந்தது.  அப்பொழுது  இரவு  நீ்ங்கிக்  கதிரவன் உதித்தான்.
அரக்கப்     படைத்தலைவர்கள்     வானரத்     தலைவர்களாலும்
இலக்குவனாலும்  கொல்லப்பட்டனர்.  அரக்கப்பெரும் படை சிதைந்து
அழிந்தது  பின்னர்  இராவணனது  தூதுவர்கள்  நடந்ததை அறிவிக்க
இராவணன்  இருக்கும்  இடத்திற்கு  ஓடினார்கள்.  என்ற  செய்திகள்
இப்படலத்தில் கூறப்படுகின்றன.
 

                       படைத்தலைவர் போரிட இசைவு வேண்டல்
 

8302.ஆர்த்து எழும் ஓசை கேட்ட அரக்கரும், முரசம் ஆர்ப்ப,
போர்த் தொழில் வேட்கை பூண்டு, பொங்கினர், புகுந்து
                                      மொய்த்தார்;