பக்கம் எண் :

406யுத்த காண்டம் 

தார்த் தட மார்பன் தன்னை, ‘தா, விடை’ என்னச்
                                       சார்ந்தார்;
பார்த்தனன், முனிந்து மன்னன், இனையன பகர்வது ஆனான்:
 

ஆர்த்து  எழும் ஓசை கேட்ட அரக்கரும்  -  (வானரப்  படை
வீரர்கள்)  ஆரவாரத்தோடு  எழுப்பிய  (பேரொலி)  கேட்ட  அரக்கப்
படை  வீரர்கள்; முரசம்  ஆர்ப்ப - முரசு ஒலிக்க; போர்த் தொழில்
வேட்கை  பூண்டு
 -  போர்த்  தொழில்  செய்தலில் பெரு விருப்பம்
கொண்டு; பொங்கினர் புகுந்து மொய்த்தார் - சினம் மிக்கவர்களாய்ப்
புகுந்து  நெருங்கித்; தார்த்தட  மார்பன் தன்னை - மாலை அணிந்த
அகன்ற  மார்பினை உடைய இராவணன் தன்னைப் பார்த்து; விடைதா
என்னச்  சார்ந்தார்
 -  விடை தருக  என்று  (கேட்டு) நெருங்கினர்;
மன்னன் -  அரசனாகிய இராவணன்; முனிந்து பார்த்தனன் - சினம்
கொண்டு   பார்த்து; இனையன  பகர்வது  ஆனான்  -  இத்தகைய
சொற்களைச் சொல்லல் ஆனான்
 
 

                                                  (1)
 

                       மாபக்கன் புகை நிறக்கண்ணன் வேண்டுதல்
 

8303.மாபெரும்பக்கனோடு வான் புகைக்கண்ணன் வந்தான்;
‘ஏவுதி எம்மை’ என்பார்; தம் முகம் இனிதின் நோக்கி,
‘போவது புரிதிர்’ என்னப் புகறலும், பொறாத தூதர்,
‘தேவ! மற்று இவர்கள் செய்கை கேள்!’ எனத் தெரியச்
                                     சொன்னார்;
 

மாபெரும்  பக்கனோடு - மாபக்கனோடு; வான் புகைக் கண்ணன்
வந்தான்
-  சிறந்த புகை நிறக் கண்ணனும்  (சேர்ந்து)  வந்து; எம்மை
ஏவுதி என்பார்
- இப்போருக்கு எங்களை ஏவுக என்றார்கள்; தம்முகம்
இனிதின்  நோக்கி
- இராவணன் அவர்தம் முகங்களை மகிழ்ச்சியோடு
பார்த்து;  போவது  புரிதிர்   என்னப்   புகறலும்  -  (போருக்குப்)
போவதைச்   செய்யுங்கள்   என்று  கூறுதலும்;  பொறாத  தூதர்  -
(அதனைக்   கேட்டுப்)   பொறுக்க  முடியாத  தூதுவர்கள்;  தேவ  -
தேவனே! மற்று  இவர்கள் செய்கை கேள் எனத் - இவர்கள் செய்த
செயலைக்  கேட்பாயாக  என்று;  தெளியச் சொன்னார் - தெளிவாகச்
சொல்லலாயினார்.