பக்கம் எண் :

 படைத் தலைவர் வதைப் படலம் 407

பொறாத  தூதர் - போர்க்களத்தில் இந்திரசித்தனைத் தனியே விட்டு
விட்டு உயிர் பிழைப்பதற்காக  ஓடிப்போய்  விட்டுத் தற்போது எம்மைப்
போருக்கு    அனுப்புக    என்று  கேட்டதைப்  பொறுத்துக்  கொள்ள
முடியாத தூதர் என்க. மற்று - வினைமுற்று.
 

                                                  (2)
 

8304.‘ஆனையும் பரியும் தேரும் அரக்கரும் அமைந்த ஆழித்
தானைகள் வீய, நின்ற தலைமகன் தனிமை ஓரார்,
“மானவன் வாளி, வாளி! என்கின்ற மழலை வாயார்,
போனவர் மீள வந்து புகுந்தனர் போலும்! என்றார்.
 

ஆனையும்  - யானைகளும்;   பரியும் - குதிரைகளும்;  தேரும் -
தேர்ப்படைகளும்;    அரக்கரும்  -   காலாட்   படை  வீரர்களாகிய
அரக்கர்களும்;    அமைந்த   -   (ஒன்றாகச்  சேர்ந்து)  (நால்வகைப்
படையாக)   அமைந்த;  ஆழித்தானைகள்  வீய  -  கடல்  போன்ற
படைகள்  அழிவுற்றதனால்;  தனிமை  நின்ற  தலைமகன் - தன்னந்
தனியனாய்ப்  (போர்க்களத்தில்) நின்ற தலைவனாகிய  இந்திரசித்தனது;
தனிமை  ஓரார்  -  தனிமையைப் பற்றிச் சிறிதும் எண்ணிப் பாராமல்;
மானவன்  வாளி  வாளி  என்ற  -  மனிதனாகிய இலக்குவனுடைய
அம்புகள்  அம்புகள் என்கின்ற; மழலை வாயார் - குழறிச் சொல்லும்
சொற்களைக்  கொண்ட  வாயினை  உடையவர்களாய்;  போனவர்  -
போர்க்களத்தை  விட்டு  ஓடிப்  போனவர்கள்;  மீளவந்து - மீண்டும்
வந்து;   புகுந்தனர்   போலும்   என்றார்  -   (தங்கள்  வீரத்தை
வெளிக்காட்ட) புகுந்துள்ளார் போலும் என்றனர். (தூதுவர்)
 
 

                                                  (3)
 

கலி விருத்தம்
 

8305.அற்று அவர் கூறலும், ஆர் அழலிற்றாய்
முற்றிய கோபம் முருங்க முனிந்தான்,-
‘இற்றிதுவோ இவர் சேவகம்?’ என்னா,
‘பற்றுமின்!’ என்றனன்-வெம்மை பயின்றான்.
 

அவர்  - அந்தத் தூதுவர்கள்; அற்று  கூறலும் - அவ்வாறு ஆன
சொற்களைச்  சொன்ன  அளவிலே;  வெம்மை பயின்றான் - கொடுஞ்
(செயல்களைச்  செய்வதிலேயே) பயின்றவன் ஆகிய இராவணன்;  ஆர்
அழலிற்றாய்
- நிறைந்த தீயின் தன்மைத்தாய;