முற்றிய கோபம் - முதிர்ந்த சினம்; முருங்க முனிந்தான் - (தன் தன்மையை அழித்தலால்) மிகச் சினந்தவனாகி; இவர் சேவகம் இற்றிதுவோ என்னா - இவர்கள் (என் மனனுக்குச் செய்த) சேவகம் இவ்வகைப்பட்டதோ என்று கூறி; பற்றுமின் என்றனன் - (இவர்களைப்) பிடியுங்கள் என்றான். |
(4) |
8306. | என்றலும், எய்தினர், கி்ங்கரர் என்பார், பின்றலினோரை வலிந்து பிடித்தார், நின்றனர்; ஆயிடை, நீல நிறத்தான், ‘கொன்றிடுவீர் அலிர்; கொண்மின், இது’ என்றான். |
என்றலும் - என்று (இராவணன்) கூறிய உடனே; கிங்கரர் என்பார் - கி்ங்கரர் என்ற பெயர் உடையவர்கள்; எய்தினர் - நெருங்கி; பின்றலினோரை - (போர்க்களத்தில் இருந்து) பின்னிட்டு ஓடிவந்தவர்களான; (மாபக்கனையும் புகைநிறக் கண்ணனையும்) வலிந்து பிடித்தார் - இறுகப் பிடித்துக்கொண்டு; நின்றனர் - நின்றார்கள்; ஆயிடை - அப்பொழுது; நீல நிறத்தான் - கரிய நிறம் உள்ள இராவணன்; கொன்றிடுவீர் அலீர் - (இவர்களைக்) கொன்று விடவேண்டாம்; இது - (நான் சொல்லப்போகிற இச்செய்தியை); கொண்மின் என்றான் - மனத்தில் நிலை நிறுத்திக்கொள்ளுங்கள் என்றான். |
(5) |
8307. | ‘ஏற்றம் இனிச் செயல் வேறு இலை; ஈர்வீர் நாற்றம் நுகர்ந்து உயர் நாசியை; நாமக் கோல் தரு திண் பணை கொட்டினிர், கொண்டு, ஊர் சாற்றுமின், “அஞ்சினர்” என்று உரைதந்தே,’ |
நாற்றம் நுகர்ந்து உயர் நாசியை - மணத்தை நுகர்ந்து கொண்டு உயர்ந்து விளங்கித் தோன்றுகிற மூக்கினை; ஈர்வீர் - (முதலில்) அறுப்பீர்கள்; (பிறகு) ஊர் - ஊர் முழுதும் கூட்டிக் கொண்டுபோய்); நாமக்கோல் தரு திண்பணை கொட்டினிர் கொண்டு - சிறந்த குறுந்தடியால் அடிக்கப்படுகிற வலிய பறையைக் கொட்டிக் கொண்டு; அஞ்சினர் என்று உரை தந்தே - (இவர்கள் போருக்கு) அஞ்சி (ஓடிவந்தவர்கள்) என்ற சொற்களைச் சொல்லி; சாற்றுமின் - (அனைவருக்கும்) சொல்லுங்கள்; ஏற்றம் இனிச் செயல் வேறு இலை - இவர்களுக்குச் செய்கிற உயர்வான |