செயல் இதைத்தவிர வேறு எதுவும் இல்லை (என்று இராவணன் கிங்கரர்களிடம் கூறினான்).
|
இச்செயல் பிற அரக்க வீரர்களுக்கு ஓர் எச்சரிக்கையாயும் அச்சுறுத்தலாயும் அமைந்த செயல் எனக்கொள்க.
|
(6)
|
8308. | அக் கணனே, அயில் வாளினர் நேரா, மிக்கு உயர் நாசியை ஈர விரைந்தார், புக்கனர்; அப் பொழுதில், ‘புகழ் தக்கோய்! தக்கிலது’ என்றனன், மாலி, தடுத்தான்.
|
அக் கணனே - (அவ்வாறு இராவணன் கட்டளை இட்ட) அப்பொழுதே; அயில்வாளினர் - கூர்மையான வாளினை உடைய (கிங்கரர்கள்); நேரா - (அக்கட்டளைககு) உடன்பட்டு நேர்ந்து; மிக்கு உயர் நாசியை - (மாபக்கன் புகை நிறக் கண்ணன் ஆகியவர்களுடைய) மேல் நோக்கி உயர்ந்த மூக்கினை; ஈர விரைந்தார் புக்கனர் - அறுப்பதற்காக விரைந்து வந்து புகுந்தனர்; அப்பொழுதில் - அப்பொழுது; மாலி - மாலி என்னும் அரக்கப் படைத்தலைவன் (இராவணனை நோக்கி); புகழ்தக்கோய் - புகழுக்குத் தகுதியானனே; தக்கிலது என்றனன் தடுத்தான் - இச்செயல் தகுதிக்குரியதன்று என்று கூறித் தடுத்தான்.
|
(7)
|
8309. | ‘அம் சமம் அஞ்சி அழிந்துளர் ஆனார், வெஞ் சமம் வேறலும், வென்றியது இன்றாய்த் துஞ்சலும் என்று இவை தொல்லைய அன்றே? தஞ்சு என ஆர் உளர், ஆண்மை தகைந்தார்?
|
அம்சமம் - அழகிய போரில்; அஞ்சி அழிந்துளர் ஆனார் - அஞ்சி (மனம் அழிந்தவர்களானவர்கள்; வெஞ்சமம் வேறலும் - (பிறிதொரு) கொடிய போரில் வெல்லுதலும்; வென்றியது இன்றாய்த் துஞ்சலும் - வெற்றி இல்லாமல் இறந்து படுதலும்; என்று இவை - என்ற இவ்வகைச்செயல்கள்; தொல்லைய அன்றே - பழமையான முறையில் வருபவை அல்லவா? ஆண்மை தஞ்சு என தகைந்தார் - ஆண்மைப் பண்பைத் தன்னிடத்திலேயே அடைக்கலமாக (நிலையாகக்) கொண்டவர்கள்; ஆர் உளர் - (இந்த உலகத்தில்) யாவர் உளர் ஒருவருமில்லை என்றபடி.
|