இதன்மூலம் போரில் எதுவும் நடக்க வாய்ப்பு உள்ளது என்ற கருத்து உயைவன் மாலி எனலாம். உலக இயற்கையும் அதுதானே? |
(8) |
8310. | ‘அந்தரம் ஒன்றும் அறிந்திலை அன்றே; வந்தன நம்வயின் எத்தனை, மன்னா! தந்திரம், வானவர் தானவர் என்னும், இந்திரன் அஞ்சினன்; எண்ணுதி அன்றே! |
மன்னா - மன்னனே; அந்தரம் ஒன்றும் அறிந்திலை அன்றே - (நீ) வேறுபாடு எதையும் ஒரு சிறிதம் அறிந்திருக்கவில்லை அல்லவா? வானவர் - தேவர்கள்; தானவர் - தானவர்கள்; என்னும் தந்திரம் - என்கிற படைகள்; நம் வயின்வந்தன எத்தனை - நம்முடன் போரிட வந்தவைகள் எத்தனையோ அல்லவா? (அவையெல்லாம் நம்மிடம் தோற்றுப்போய் விடவில்லையா?) இந்திரன் அஞ்சினான் - தேவர் தலைவனாகிய இந்திரன் (கூடப்) போருக்கு அஞ்சினானே! எண்ணுதி அன்றே - (அதை நீ) எண்ணிப் பார்க்கலாமல்லவா? |
(9) |
8311. | ‘வருணன் நடுங்கினன், வந்து வணங்கிக் கருணை பெறும் துணையும், உயிர் கால்வான்; இருள் நிற வஞ்சகர் எங்கு உளர்? எந்தாய்! பருணிதர் தண்டம் இது அன்று, பகர்ந்தால். |
எந்தாய் - எமது தந்தையே; வருணன் வந்து வணங்கி - (உன்னுடைய ஆற்றலுக்கு அஞ்சித் தோற்ற) வருணன் (வந்து உன்னை) வணங்கி நின்று; கருணை பெறும் துணையும் - (உன்) அருள் பெறும் கால அளவும்; உயிர் கால்வான் நடுங்கினான் - பெரு மூச்சு விட்டுக்கொண்டு நடுங்கி நின்றான் (என்றால்); இருள் நிற வஞ்சகர் எங்கு உளர்? - இருட்டின் நிறம் உள்ள வஞ்சனைப் பண்பு நிறைந்த இவர்கள் எங்கே இருப்பர் (வருணனே அஞ்சி நிற்கையில் இவர்கள் உயிருக்கு அஞ்சி ஓடிவந்தது பெரும் பிழையிலை); பகர்ந்தால் - எடுத்துச் சொன்னால்; இது - (நீ கொடுத்த) இந்தத் தண்டனை; பருணிதர் தண்டம் அன்று - அறிவு உடையோர் கொடுக்கும் தண்டனை அன்று. |