வருணனே உன்னிடத்தில் திக்கு விசயத்தில் நிற்கும்போது இவர்கள் எம்மாத்திரம் என்று மாலி கூறுகிறான். இராமனிடம் வருணன் அஞ்சி நடுங்கியது குறித்ததாகவும் கொள்ளலாம். |
(10) |
8312. | ‘பத்து-ஒரு நாலு பகுத்த பரப்பின் அத்தனை வெள்ளம் அரக்கர் அவிந்தார்; ஒத்து ஒரு மூவர் பிழைத்தனர், உய்ந்தார்; வித்தக! யார் இனி வீரம் விளைப்பார்? |
வித்தக - வித்தகனே! பத்து ஒரு நாலு - நாற்பது வெள்ளமாகப்; பகுத்த பரப்பின் - பிரிந்த பரப்பினை உடைய; அத்தனை வெள்ளம் அரக்கர் அவிந்தார் - அத்தனை வெள்ளம் அரக்கப் படை வீரரும் (இலக்குவன் கணைகளாலும் வானரப் படையினராலும்) போரில் இறந்து ஒழிந்தனர்; ஒரு மூவர் - இந்திரசித்தன், புகைநிறக் கண்ணன் மாபக்கன் என்ற மூவர்; ஒத்து உய்ந்தார் பிழைத்தனர் - ஒன்றாக (உயிர்) தப்பியவர்களாகிப் பிழைத்தார்கள்; இனியார் - இனிமேல் யாவர்? வீரம் விளைப்பார் - (இவர்களைப் போல்) வீரச் செயல் செய்யவல்லராவர்? |
(11) |
8313. | ‘பாசமும் இற்றது; பாதியின் மேலும் நாசமும் உற்றது; நம்பி! நடந்தாய்; பூசல் முகத்து ஒரு கான்முளை போதா, நீசரை ஈருதியோ, நெடு நாசி? |
நம்பி - ஆடவரில் சிறந்தவனே; பாசமும் இற்றது - (இந்திர சித்தனது) நாகக் கணையும் வலி இழந்து இற்றுப் போய் விட்டது; பாதியின் மேலும் நாசமும் உற்றது - (அரக்கப் படை) பாதிக்கு மேல் (போரில்) அழிந்து போய் விட்டது; நடந்தாய் - (நீயும்) முதல் நாள் போருக்குச் சென்று விட்டுத்) திரும்பி வந்துவிட்டாய்; பூசல் முகத்து - போர் முகத்தில்; ஒருகான்முளை போதா - ஒப்பற்ற (உன்) மகனுடன் (இறுதி வரை உடன்நின்று) போகாத; நீசரை - (எளிமைத் தன்மை உடைய) நீசர்களாகிய இந்தப் பணியாளருடைய; நெடுநாசி - நீண்ட மூக்கினை; ஈருதியோ - அறுக்கக்கடவாயோ? |
(12) |
8314. | ‘”வாழி இலக்குவன்” என்ன, மறுக்குற்று ஆழி அரக்கர் தம் வாயில் அடைப்பார்; |