| ஏழ கடல் துணையோ? இனி, நாசி ஊழி அறுத்திடினும், உலவாதால்.
|
வாழி இலக்குவன் என்ன - இலக்குவன் என்று (பெயர்) சொன்னாலும்; மறுக்குற்று - மனக்கலக்கம் அடைந்து; ஆழி அரக்கர் தம் வாயில் அடைப்பார் - கடல் (நீர்) வாயிலை அடைப்பார்கள்; இனிநாசி - (அவர்கள் எல்லோருடைய மூக்கையும் அறுக்க முற்பட்டால்) இனி மூக்கின் தொகுதி; ஏழு கடல் துணையோ - ஏழு கடலின் அளவு மாத்திரம் இருக்குமோ; ஊழி அறுத்திடினும் - (அப்படி அறுத்தலைத் தொடங்கினால்) ஊழிக்காலம் வரை அறுத்தாலும்; உலவாதால் - முடியாததாகும்,
|
வாழி - அசை. ஆழி அரக்கர் - உவமைத்தொகை
|
(13)
|
8315. | தூது நடந்தவனைத் தொழுது, அந் நாள், ஓது நெடுஞ் செரு அஞ்சி உடைந்தார், தீது இலர் நின்றவர், சேனையின் உள்ளார் பாதியின் மேலுளர், நாசி படைத்தார்!
|
ஓது நெடுஞ் செரு அஞ்சி - சிறப்பித்துச் சொல்லப்படுகிற பெரிய போருக்கு அஞ்சி; அந்நாள் - அந்த நாளில்; தூது நடந்தவனைத் தொழுது - தூதுவனாக வந்த அனுமனைத் தொழுது; உடைந்தார் - தோற்றுப் போனவர்களாய் (இருந்தும்); தீது இலர் நின்றிவர் - (தண்டனை என்னும்) தீது இல்லாதவராய் நின்றவர்கள்; சேனையின் - (நம்) அரக்கர் படையில்; பாதியின் மேலுளர் - பாதிக்கு மேல் உள்ளவர்கள்; நாசி படைத்தார் உள்ளார் - மூக்கு உள்ளவர்களாய் உள்ளார்கள்.
|
(14)
|
8316. | ‘விட்டிலை சீதையை ஆம்எனின், வீரர் ஒட்டிய போரினில் ஆர் உளர், ஓடார்? “வெட்டுதி நாசியை, வெந் தொழில் வல்லோர் பட்டிலர் என்றிலை என்று பகர்ந்தான்.
|
சீதையை விட்டிலை ஆம் எனின் - (நீ) சீதையை விட்டு விடவில்லை ஆனால் வீரர் ஒட்டிய போரினில் - வீரர்கள் நெருங்கிச் செய்யும் போரில்; ஓடார் ஆர் உளர் - (அஞ்சி) ஓடாத அரக்க வீரர்கள் யார் இருக்கப் போகிறார்கள்; வெந்தொழில் வல்லோர் பட்டிலர் - கொடிய போர்த்தொழில் வல்ல (இராம இலக்குவர்) |